For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 இந்திய வீரர்களுக்கு இது தான் கடைசி டி20 உலககோப்பை.. காரணம் இது தான்.. வெற்றியுடன் செல்வார்களா ?

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

இதற்கான இந்திய அணியில் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்களை தேர்வு குழு தேர்வு செய்துள்ளது.

இந்த நிலையில் மூன்று இந்திய வீரர்களுக்கு இது கடைசி டி20 உலக கோப்பை போட்டியாக இருக்கலாம். அவர்கள் யார்? என்ன காரணம் என்பதை தற்போது காணலாம்.

 முகமது ஷமி

முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக விளங்கும் முகமது ஷமிக்கு தற்போது 32 வயதாகிறது. நடப்பு டி20 உலக கோப்பை மெயின் அணியிலேயே முகமது ஷமி இடம் பெறவில்லை.வெறும் ரிசர்வ் வீரர் ஆகத்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த டி20 உலக கோப்பை நடைபெறும் போது முகமது ஷமிக்கு வயது 34 ஆகிவிடும் இதனால் அவர் அடுத்த டி20 உலக கோப்பை போட்டியில் பங்கு பெறுவது சந்தேகமே.

 அஸ்வின்

அஸ்வின்

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு தற்போது வயது 35 ஆகிறது. டெஸ்ட் பந்து வீச்சாளராக அடையாளம் காணப்படும் அஸ்வின் ஒரு நாள் மற்றும் டி20 அணியில் இருந்து ஓரங்கட்டுப்பட்டு வருகிறார். ரவி பிஷ்னாய், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் என பல இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பதால் அஸ்வினுக்கு இடம் கிடைப்பது சந்தேகமே.

 தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இதேபோன்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை டி20 போட்டியில் விளையாடுவது சந்தேகமே. காரணம் அப்போது அவருக்கு வயது 39 ஆக இருக்கும். ஏற்கனவே கடும் போராட்டத்திற்கு பிறகு தான் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்துள்ளார்.இதனால் இதுவே அவருக்கு கடைசி டி20 உலக கோப்பை தொடராக இருக்கும்.

 மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 35 வயதாகிறது அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் உலக கோப்பையில் அவர் பங்கு பெறுவாரா? இல்லை சச்சின் வழியில் விலகி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்று தெரியவில்லை. இதை போன்று ஷிகர் தவான் ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவரும் இனி அடுத்த டி20 உலக கோப்பை போட்டியில் பங்கு பெறுவது சாத்தியம் இல்லை. இதனால் பெரும்பாலான நட்சத்திர வீரர்களுக்கு இந்த டி20 உலக கோப்பை தொடரே கடைசியாக இருக்கலாம். இதனால் எப்படியாவது இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Story first published: Wednesday, September 14, 2022, 18:13 [IST]
Other articles published on Sep 14, 2022
English summary
3 Indian Players might Playing their Last t20 world cup 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+