Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை இந்திய அணிக்கு திரும்பும் சீனியர்.. ஆசிய கோப்பையில் களமிறங்காத 3 பேருக்கு வாய்ப்பு

மும்பை : டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாத 3 பேர் இந்திய அணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

LLC 2022-ன் Schedule வெளியானது! ஆரம்பமே Sehwag vs Gambhir | Aanee's Appeal | Cricket

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். பேட்டிற்கு பந்து நன்றாக வரும். இதனால் வேகமாகவும், கட்டுக்கோப்பாகவும் பந்துவீசும் வீரர்கள் இந்திய அணிக்கு தேவை.

ஆசிய கோப்பை தொடரை கணக்கில் எடுத்து கொண்டால் ஹர்திக் பாண்டியா 3வது வேகப்பந்துவீச்சாளராக 4 ஓவர்கள் முழுமையாக செயல்படுவாரா என்று தெரியவில்லை.

முகமது ஷமி

முகமது ஷமி

ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து அதிகபட்சம் 2 அல்லது 3 ஓவர்களை எதிர்பார்க்கலாம். இதனால் இந்திய அணிக்கு மேலும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் நிச்சயம் தேவை என்ற முடிவுக்கு டிராவிட், ரோகித் கூட்டணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் அனுபவ வீரர் முகமது ஷமியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

இதே போன்று இந்திய அணியின் நடுவரிசையும் சற்று தடுமாறுகிறது. ஆசிய கோப்பையில் கூட ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா கூட்டணி சொற்ப ரன்களில் வெளியேறியது. இதனால் கூடுதல் வீரராக சஞ்சு சாம்சன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பலாம். ஆஸ்திரேலிய ஆடுகளம், சஞ்சு சாம்சனின் பேட்டிங்கிற்கு ஏற்ற களமாக இருக்கும் என்று ரோகித் ஏற்கனவே கூறி இருக்கிறார்.

ஹர்சல் பட்டேல்

ஹர்சல் பட்டேல்

இது அனைவருக்கும் தெரிந்த வீரர் தான். ஆனால் ஆர்ஸ்தீப் சிங் இருப்பதால் ஹர்சல் பட்டேல் இந்திய அணியில் இருக்க மாட்டார் என்று பலரும் கணித்துள்ளனர். ஆனால் அது தவறு. ஹர்சல் பட்டேல் முழு உடல் தகுதியையும் பெற்றுள்ளார். இதனால் ஹர்சல் பட்டேல் கண்டிப்பாக டி20 உலககோப்பை தொடரில் இடம்பெறுவார்.

இந்திய அணி

இந்திய அணி

பும்ரா காயத்திலிருந்து குணமடைந்த பிறகு கண்டிப்பாக அணிக்கு திரும்புவது உறுதி. இதனால், பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஆர்ஸ்தீப் சிங், ஹர்சல் பட்டேல் என கண்டிப்பாக 5 வேகப்பந்துவீச்சாளர்களும், அக்சர் பட்டேல், அஸ்வின், சாஹல் என 3 சுழற்பந்துவீச்சாளர்களும், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன் என 3 விக்கெட் கீப்பர்களும் இடம்பெற்றால், ரோகித், ராகுல், கோலி,சூர்யகுமார் என 4 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இடம் சரியாக இருக்கும்.

Story first published: Saturday, September 10, 2022, 7:46 [IST]
Other articles published on Sep 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+