
அஸ்வின் செயல்பாடு
அஸ்வின் டி20 போட்டியில் எதற்கு ? அவர் நடப்பாண்டில் டி20 போட்டியில் சரிவர விளையாடவில்லை. பிறகு ஏன் வாய்ப்பு தருகிறார்கள் என்று எல்லாம் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு தெரியாது. அஸ்வின் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடிய 10 டி20 போட்டியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கறார். இதில் ஒரு ஓவருக்கு 6.10 ரன்கள் மட்டுமே வழங்கி இருக்கிறார்.

ரன்களை கட்டுப்படுத்துவார்
இது கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து கணக்கை எடுத்து கொண்டால் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களில் சிறந்த செயல்பாடு ஆகும். மேலும், ஒரு அணியில் ஒரு சுழற்பந்துவீச்சாளரின் வேலை விக்கெட்டுகளை எடுப்பது மட்டுமல்ல. ரன்களை கட்டுப்படுத்தி நெருக்கடியை உண்டாக்குவது தான், அஸ்வின், ஒரு முனையில் ரன்களை கட்டுப்படுத்தி நெருக்கடியை உண்டாக்கினால், அது மறுபுறும் பந்துவீசும் சாஹல் போன்ற பந்துவீச்சாளருக்கு தான் சாதகம்.

அஸ்வின் பேட்டிங்
கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக இந்த கூட்டணி வீழ்த்திய விக்கெட்டுகளை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. மேலும், ஜடேஜா தற்போது அணியில் இல்லாத நிலையில், அஸ்வினின் பேட்டிங் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தரும். அஸ்வினுடைய பேட்டிங் சமீப காலமாக நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.

அதிக விக்கெட்டுகள்
பேட்டிங்கில் அரைசதம் எல்லாம் அடித்து இருக்கிறார். இதனால் அஸ்வின் 7 அல்லது 8வது வீரராக இறங்கினால், இந்தியாவின் பேட்டிங் வலு பெறும். இதே போன்று மேலும், அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியவர். இதே போன்று வலது கை பேட்ஸ்மேன்களுக்கு அவர் வீசும் கேரம் பந்து முறையும் நெருக்கடியை அளிக்கும். டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரரான அஸ்வினின் அனுபவம் நிச்சயம் அணிக்கு கை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications