ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் ஒரு பரமபதம் போல் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வரும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். நேற்று வரை புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த சிஎஸ்கே அணி ஒரே ஒரு தோல்வியின் மூலம் தற்போது மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததற்கான மூன்று முக்கிய காரணங்களை தற்போது பார்க்கலாம். டாஸ் என்பது இதுபோன்ற ஆடுகளங்களில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் என்பது நேற்று தெரிந்துவிட்டது.

ஆடுகளம் போகப்போக தோய்வாக மாறிவிட்டதால், சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை ரன் குவிக்க முடியவில்லை. இந்த நிலையில் ராஜஸ்தான் அணி பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் குவித்தது. ஆனால் அதே பவர் பிளவில் சிஎஸ்கே அணி பேட்டிங்கில் ஒரு விக்கெட் இழந்து 42 ரன்கள் மட்டுமே அடித்தது.
200 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்த வேண்டும் என்றால் பவர் பிளேவை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இதில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் அரைசதம் அடித்த கான்வே 16 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதேபோன்று ஆடுகளம் தோய்வாக மாறுகிறது என்றால் முதல் பத்து ஓவர்களில் ரன் குவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ராஜஸ்தான் அணி முதல் பத்து ஓவர்களில் எல்லாம் 100 ரன்களை கடந்து விட்டது. ஆனால் சிஎஸ்கே அணி 14 வது ஓவரில் தான் நூறு ரன்களை எடுத்தது. இது தோல்விக்கு முக்கிய காரணமாகும். அதேபோன்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரஹானே இந்த ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இம் பேக்ட் வீரராக களம் இறங்கிய ராயுடுவும் டக் அவுட் ஆனது சிஎஸ்கே வின் நெருக்கடியை அதிகரித்தது.

இந்த இன்னிங்ஸில் சிஎஸ்கே வீரர்கள் சரியாக பில்டர்களுக்கு நேராக கேட்ச் கொடுத்து ஆட்டம் இழ்ந்தனர்.அதேபோன்று சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் ஆகாஸ் சிங் இரண்டு ஓவர்களுக்கு 32 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதேபோன்று பதிரானா 4 ஓவர்களில் 48 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இதில் 11 யாக்கர்களை வீசினாலும் பேட்டில் எட்ஜ் ஆகி நான்கு பவுண்டரிகளுக்கு மேல் சென்றது. இதுவும் ராஜஸ்தான் அணி ரன்களை அதிகமாக எட்டுவதற்கு காரணமாக அமைந்தது.இந்தத் தோல்வி சிஎஸ்கேவுக்கு பெரிய அபாயத்தை ஏற்படுத்தாது என்றாலும் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான தனிப்பட்ட ரெகார்ட் மோசமாக செல்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது.