Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு திரும்பிய உமேஷ் யாதவ்.. 3 காரணங்களை பரிசீலித்த பிசிசிஐ.. திட்டம் பலன் அளிக்குமா?

மொஹாலி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து முகமது ஷமி கொரோனா பாதிப்பு காரணமாக விலகியுள்ளார்.

முகமது ஷமிக்கு பதில், வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவை தேர்வுக்குழு மாற்று வீரராக அறிவித்துள்ளது.

இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உமேஷ் யாதவுக்கு பதில் முகமது சிராஜை தேர்வு செய்து இருக்கலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஏன் உமேஷ் யாதவ் ?

ஏன் உமேஷ் யாதவ் ?

இந்த நிலையில், உமேஷ் யாதவை சேர்த்ததற்கான காரணத்தை தற்போது காணலாம். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற காரணத்தில் தான் முகமது ஷமியை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தனர். தற்போது அவர் விலகியதால், அவரை போலவே பந்துவீசும் நபரை தான் தேர்ந்து எடுப்பது சரி. அப்படி பார்த்தால் அது உமேஷ் யாதவ் தான் சரியான தேர்வு.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

உமேஷ் யாதவ் நன்கு வேகமாக பந்துவீசக் கூடியவர். பந்தையும் ஸ்விங் செய்வதில் வல்லவர். மேலும், கடந்த ஐபிஎல் தொடரில் பவர்பிளேவில் உமேஷ் யாதவ் சிறப்பாகவே பந்துவீசி வந்தார். கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக விளங்கிய அவர், 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, சராசரியாக 7 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார்.

ராயல் கோப்பை தொடர்

ராயல் கோப்பை தொடர்

இதே போன்று முகமது ஷமி, கடைசியாக கிரிக்கெட் விளையாடி 2 மாதத்திற்கு மேல் ஆகிறது. இதனால், அவர் மேட்ச் ஃபிட்னஸ் இல்லாமல் இருந்திப்பார். ஆனால் உமேஷ் யாதவ், இங்கிலாந்தில் சென்று கவுண்டி கிரிக்கெட் மற்றும் ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை தொடரில் விளையாடினார். இதில் ஒருநாள் தொடரில் 7 போட்டியில் விளையாடி 16 விக்கெட்டுகளை உமேஷ் யாதவ் வீழ்த்தினார்.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

ராயல் கோப்பை ஒருநாள் தொடரில் இங்கிலாந்தில் பயன்படுத்த ஆடுகளம் கிட்டத்தட்ட ஆஸ்திரேலிய ஆடுகளம் போல், பந்து பேட்டிற்கு நன்றாக வரும் படி, ஸ்விங் ஆகாத வகையில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இதில் உமேஷ் யாதவ் கலக்கியதும் அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு காரணமாக கருதப்படுகிறது.

Story first published: Sunday, September 18, 2022, 15:18 [IST]
Other articles published on Sep 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+