Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு அஸ்வின் ஏன் முக்கியம்.. 3 காரணங்கள் முன்வைக்கும் நிபுணர்கள்.. ரோகித் ஓகே சொல்வாரா?

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் அஸ்வின் ஏன் இடம்பெற வேண்டும் என்ற 3 காரணத்தை தற்போது காணலாம்.

Recommended Video

Ravichandran Ashwin ஏன் Indian Team-க்கு முக்கியம்? Playing 11-ல் ஆடுவாரா? | Aanee's Appeal

ஒவ்வொரு அணியும், 8 அல்லது 9வது இடத்தில் களமிறங்கும் வீரர் கூட பேட்டிங்கில் ரன் அடிக்கும் வீரராக இருக்கிறார். ஆனால் ஜடேஜா இல்லாததால் இந்திய அணியில் 6வது இடத்தை தாண்டினாலே 7வது இடத்தில் அக்சர் பட்டேல் தான் இருக்கிறார்.

இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இதனால் தான் அஸ்வின் போன்ற பேட்டிங் தெரிந்த வீரர்கள் அணியில் இடம்பெறுவது அவசியம்.

ஆல்ரவுண்டர்

ஆல்ரவுண்டர்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக நடுவரிசையில் இறங்கி அஸ்வின் அரைசதம் கூட அடித்திருக்கிறார். இதனால் அஸ்வினை அக்சர் பட்டேலுடன் ஓரு ஆல்ரவுண்டராக அணியில் சேர்ப்பது முக்கியம். 10 பந்தில 20 ரன்கள் அடிக்க வேண்டும். கைவசம் 2 விக்கெட் தான் உள்ளது. களத்தில் அஸ்வின் நிற்கிறார் என்ற நிலையில் தான் அவருடைய முக்கியத்துவம் புரியும்.

ரன்களை கட்டுப்படுத்துங்கள்

ரன்களை கட்டுப்படுத்துங்கள்

இதே போன்று டி20 கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்பதல்ல, ரன்களை கட்டுப்படுத்தினாலே அது பாதி வெற்றி தான். தோனி அடிக்கடி சொல்வார். 20 ரன்கள் கொடுக்க வேண்டிய இடத்தில் பந்துவீச்சாளர்கள் 10, 12 ரன்கள் கொடுத்தாலே அது வெற்றி தான் என்று சொல்வார். அதை தான் அஸ்வினும் செய்வார். பேட்ஸ்மேன் போல் பந்துவீச்சாளர்களும் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்துவீச வேண்டும்.

பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம்

பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம்

ஒரு முனையில் ஒரு பவுலர் ரன்களை கட்டுப்படுத்தினால், அது பேட்டிங் செய்யும் அணிக்கு நெருக்கடியை கொடுத்து, அடுத்த முனையில் பந்துவீசும் இன்னொரு பந்துவீச்சாளருக்கு விக்கெட்டை கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒருமுனையில் அஸ்வின் டிஃபன்ஸ் முறையில் போக, அவர் உருவாக்கிய ரன் அழுத்தத்தைப் பயன்படுத்தி சாகல் மிகச் சிறப்பாக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அஸ்வினின் ஆயுதங்கள்

அஸ்வினின் ஆயுதங்கள்

கடந்த ஐபிஎல் தொடரில் அஸ்வின் மொத்தம் 503 பந்துகளை வீசி இருக்கிறார். இதில் 277 பந்துகள் அதாவது சரிபாதிக்கு மேலான பந்துகள் கேரம் பந்துகள். ரைட் ஹேண்ட் பேட்மேன்களை கட்டுப்படுத்த அஸ்வின் இப்படி வீசியிருக்கிறார். இது போன்று இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை அஸ்வின் அதிகம் வீழ்த்தி இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 டி20 போட்டியில் விளையாடிய அஸ்வின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அஸ்வினை அணியில் சேர்ப்பது முக்கியம்.

Story first published: Friday, September 23, 2022, 16:51 [IST]
Other articles published on Sep 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+