முகமது அமீர், வகாப் ரியாஸ், ஆசிப் அலி...!! பாக். உலக கோப்பைக்கான அணியில் 3 அதிரடி மாற்றங்கள்
Recommended Video
இஸ்லாமாபாத்:உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வரும் 30ம் தேதி தொடங்கும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு மாதத்துக்கு முன்பு உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதற்கான அறிவிப்பை அந்நாட்டு கிரிக்கெட் வாரியமான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெறாத முகமது அமீர், வகாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் தற்போது அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

3 பேர் நீக்கம்
ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப், அபித் அலி ஆகியோர் முதலில் அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். வகாப் ரியாஸ், 2017ம் ஆண்டு ஜூன் மாதம் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார். அதன்பிறகு தற்போது தான் உலக கோப்பை அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

பந்துவீச்சு
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுத் தலைவர் இன்சமாம் உல் ஹக் கூறுகையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியின் பந்துவீச்சு திறன் குறைவாக இருந்தது தெரிய வந்தது. அதனால், உலக கோப்பைக்கான அணியில் வீரர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் உண்டானது.

அனுபவ பவுலர்கள்
இப்போது இரண்டு அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன் மூலம், உலக கோப்பை தொடர் முழுவதும் மிகப்பெரிய பேட்ஸ் மேன்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியும் என்று தெரிந்து கொண்டோம்.

உலககோப்பை பயிற்சி ஆட்டம்
தற்போது வகாப் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார், அவரின் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்வோம். வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வகாப் விளையாடுவார்.

கடினமான முடிவுதான்
அபித் அலியை நீக்கியது கடினமான முடிவுதான் என்றாலும், தொடக்க ஆட்டக்காரர்களுக்கு இருவர் ஏற்கனவே இருக்கிறார்கள். ஆனால் ஆசிப் அலியின் பேட்டிங்கோடு ஒப்பிடும்போது அபித் அலியின் அனுபவம் குறைந்தவர் என்று கூறினார்.

யார்? யார்?
பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியல்: சர்பராஸ் அஹமது (கேப்டன் & விக்கெட் கீப்பர்), பகார் சமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், ஹாரிஸ் சொஹைல், ஆசிப் அலி, சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், இமாத் வாசிம், சதாப் கான், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, முகமது ஆமீர், வகாப் ரியாஸ், முகமது ஹஸ்னைன்.


Click it and Unblock the Notifications