ஒரு இடத்துக்கு 3 பேர் சண்டை.. முதல் ஒருநாள் போட்டி.. சங்கடத்தில் சிக்கிய ரோகித் சர்மா.. என்ன ஆனது?
கவுகாத்தி: இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவித்துள்ளனர்.
ஹர்திக் பாண்ட்யாவின் படை டி20 தொடரை கைப்பற்றிவிட்ட சூழலில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிவிட வேண்டும் என ரோகித் முனைப்புடன் உள்ளார். இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ப்ளேயிங் 11 மாற்றம்
இந்தப்போட்டிக்கான ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் தான் தற்போது குழப்பமே எழுந்துள்ளது. ஓப்பனிங்கில் ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் இணைந்து விளையாடுவார். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி இருக்கிறார். 5வது வீரராக துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் 6வது வீரராக வழக்கம் போல ஹர்திக் பாண்ட்யா என தவிர்க்க முடியாத வீரர்கள் இருக்கின்றனர்.

4வது இடத்தில் குழப்பம்
இந்நிலையில் 4வதாக உள்ள ஒரு இடத்திற்கு மட்டும் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போட்டியிட்டு வருகின்றனர். கடந்தாண்டில் இந்தியாவுக்காக அதிக ரன்களை அடித்த வீரர் ஸ்ரேயாஸ் ஆகும். கடந்தாண்டு 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 724 ரன்களை குவித்துள்ளார். இவரும் விராட் கோலியை போன்றே நிதானமாக ரன் சேர்த்து இந்தியாவை காப்பாற்றக்கூடியவர். ஒருநாள் கிரிக்கெட்டில் இவரை போன்றவர் தேவை.

சூர்யகுமார் யாதவ்
மற்றொருபுறம் சூர்யகுமார் யாதவ் பலமாக ப்ளேயிங் 11 கதவை தட்டி வருகிறார். கடந்தாண்டு முழுவதும் டி20 கிரிக்கெட்டில் ருத்ர தாண்டவம் ஆடிய அவர், நம்பர் 1 பேட்டராக வலம் வருகிறார். 2023ம் ஆண்டி தொடக்கத்திலேயே இலங்கையுடன் 45 பந்துகளில் சதம் அடித்து தனது ஃபார்மை நிரூபித்தார். எனவே மிடில் ஆர்டரில் பயமின்றி விளையாட இவரை சேர்ப்பார்களா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

கே.எல்.ராகுல் தேவையா?
நல்ல ஃபார்மில் உள்ள இருவருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்றால் கே.எல்.ராகுலை நீக்கியாக வேண்டும். துணைக்கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவருக்கு கடைசி வாய்ப்பை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பெஞ்சில் அமர வைத்தால் பின்னர் ஸ்ரேயாஸ் மற்றும் சூர்யகுமார் ஆகியோர் வாய்ப்பு பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications