ருத்துராஜ் இடத்துக்கு போட்டி போடும் 3 வீரர்கள்.. யாருக்கு வாய்ப்பு வழங்கும் பிசிசிஐ?
லக்னோ: இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு பதில் வேறு எந்த வீரரை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தில் இருந்த ரோகித், தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில், மாற்று வீரர்களை அறிவிக்கலாமா என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது அந்த இடத்துக்கு 3 வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மணிஷ் பாண்டே
இந்திய அணியின் அனுபவமும், திறமையும் இருக்கும் மணிஷ் பாண்டே,தற்போது நல்ல பார்மில் உள்ளார். மேலும் ஆஸ்திரேலிய போன்ற ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படக் கூடியவர். இதனால் மணிண் பாண்டேவுக்கும் கிடைக்கும் போது வாய்ப்பு வழங்கி சோதிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.

ஷாரூக்கான்
டி20 போட்டிகளில் ஆடுவதற்காகவே பிறந்தவர் போன்ற தோற்றம் உடைய ஷாரூக்கானுக்கு இதுவரை பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை. ஷாரூக்கான் தற்போது ரஞ்சி கோப்பையில் அதிரடியாக விளையாடி வருகிறார். அவரை அணியில் சேர்த்தால் இந்திய அணியில் பலம் மேலும் அதிகரிக்கும். தற்போது ருத்துராஜ் காயம் மூலம் அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

குர்னல் பாண்டியா
ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான குர்னல் பாண்டியா, பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அதிரடியாக விளையாடக் கூடிய வீரர். இந்திய அணியில் இடம்பெற்றிருந்த குர்னல், திடீரென்று இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் ஆல் ரவுண்டர் என்பதால் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து இவருக்கும் வாய்ப்பு வழங்கினால் நிச்சயம் சாதிப்பார்.
Recommended Video

பிசிசிஐ முடிவு
இந்த நிலையில், இலங்கை தொடரின் 2வது மற்றும் 3வது டி20 போட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் அடுத்தடுத்து நடைபெறுகிறது. இதனால் மாற்று வீரரை உடனடியாக அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அணியில் இருக்கும் மொத்த பேட்ஸ்மேன்களை வைத்து சமாளித்து விடலாம் என்று ரோகித் சர்மாவும், டிராவிட்டும் முடிவு எடுத்துள்ளனர். ரஞ்சி போட்டி நடைபெறுவதால், 2 போட்டிக்காக வீரர்களை இந்திய அணிக்கு அழைப்பதும் சரியாக இருக்காது என்று ரோகித் கூறிவிட்டதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications