Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

254 ரன்கள் பின்தங்கிய வங்கதேசம்..இந்தியா ஃபாலோ ஆன் தராததற்கு 3 காரணம்.. ராகுல் எடுத்தது நல்ல முடிவா?

சட்டோகிராம் : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 254 ரன்கள் முன்னிலை பெற்றது.

200 ரன்கள் வித்தியாசம் இருந்தாலோ அல்லது , 60 சதவீத ரன்களை இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி எட்ட முடியாமல் போனாலும, முதலில் பேட் செய்த அணி ஃபாலோ ஆன் தரலாம்.

இதன் மூலம், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி முதல் இன்னிங்ஸ் முடிந்த உடன் 2வது இன்னிங்ஸ் தொடங்கிவிடும். இதனால் ஆட்டம் விரைவாக முடிந்துவிடும்.

ஃபாலோ ஆன் இல்லை

ஃபாலோ ஆன் இல்லை

தற்போது சட்டோகிராம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் விளாசியது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 150 ரன்களுக்கு சுருண்டது. 254 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, வங்கதேசத்திற்கு ஃபாலோ ஆன் தராமல், தனது வது இன்னிங்சை தொடர்ந்தது. இதற்கு என்ன காரணமாக இருந்திருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆடுகளம் சிக்கல்

ஆடுகளம் சிக்கல்

ஆசிய ஆடுகளங்களில் எப்போதும் கடைசியாக பேட்டிங் செய்வது மிகவும் கடினம். அப்போது ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிவிடும். தற்போது, இந்திய அணி ஃபாலோ ஆன் தராதது மூலம், வங்கதேசத்திற்கு பெரிய இலக்கை வெற்றிக்காக நிர்ணயிக்க முடியும். இதன் மூலம் வங்கதேச அணி கடைசியாக பேட்டிங் செய்யும் போது, அந்த அணி விக்கெட்டுகளை வீழ்த்துவது எளிதாகி விடும்.

பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு

பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு

ஒரு வேலை ஃபாலோ ஆன் கொடுத்து வங்கதேசம் இரண்டாது இன்னிங்சில் ஒரு 350 ரன்கள் அடித்துவிட்டால், இந்தியா கடைசியாக பேட்டிங் செய்ய நேரிடும். அது ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளதால் இந்தியா ஃபாலோ ஆன் தராமல் இருந்திருக்கும். இதே போன்று பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து 2 இன்னிங்சில ஓவர்கள் வீசினால் காயம் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பேட்டிங் பயிற்சி

பேட்டிங் பயிற்சி

இதனால் போதிய ஓய்வு வேண்டும் என்பதால், இந்தியா மீண்டும் பேட்டிங் செய்து இருக்கலாம். மேலும் இந்திய அணி 6 மாதங்களுக்கு மேல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. வரும் பிப்ரவரி மாதம் முக்கி தொடர் நடைபெற உள்ளதால், கோலி, புஜாரா, ராகுல் ஆகியோர் மீண்டும் பேட்டிங் செய்து பயிற்சி எடுத்து கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமையும்.

Story first published: Friday, December 16, 2022, 12:39 [IST]
Other articles published on Dec 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+