
பிரச்சினை என்ன
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அணி தங்களது வீரர்களை பயோபபுள் பாதுகாப்பில் வைத்துள்ளது. ஆனால் பபுள் விதிகளை மீறி குசல் மெண்டீஸ், டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் வெளியில் சுற்றித்திரிந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி நடவடிக்கை
சாலையில் அமர்ந்திருந்த குஷல் மெண்டீஸ், மற்றும் நிரோசன் டிக்வெல்லா ஆகியோர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்கள் மூவரையும் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் குனதிலகா மற்றும் டிக்வெல்லா ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு திரும்பி வரவழைத்தது.

அதிரடி முடிவு
இந்நிலையில் அவர்கள் மூவருக்கும் ஒருவருட காலம் கிரிக்கெட் விளையாட தடைவிதித்து அதிரடி உத்தரவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது. மேலும் விசாரணையின் முடிவை பொறுத்து அபராதங்களும் விதிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. அதன்படி இவர்கள் மூவரும் அடுத்ததாக மீண்டும் ஜூன் 2022ம் ஆண்டு தான் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

அனுபவ வீரர்கள்
தடைசெய்யப்பட்டுள்ள குசல் மெண்டீஸ், டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் மட்டுமே தற்போதுள்ள இலங்கை அணியில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். இவர்களின் தடையால், டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











