இந்தியாவுக்கு அடிச்சது லக்.. 3 ஆஸ்திரேலிய வீரர்கள் விலகல்.. டி20 உலககோப்பை தொடரிலும் பாதிப்பு?
மெல்போர்ன் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் போட்டி வரும் இருபதாம் தேதி மொகாலியிலும் , இரண்டாவது டி20 போட்டி 23ஆம் தேதி நாக்பூரிலும் , மூன்றாவது டி20 போட்டி 25ஆம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெறுகிறது.
ஏற்கனவே இந்த தொடரில் அதிரடி வீரர் டேவிட் வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்று முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

மிட்செல் ஸ்டார்க்
ஆஸ்திரேலியாவின் அதிரடி வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு ஒரு வகையில் இது சாதகமாக இருந்தாலும், மறுவகையில் பாதகம் தான்.மிட்செல் ஸ்டார்க் போன்ற இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் எதிர்கொண்டால் அது அவர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கும்.

மேலும் 2 வீரர்கள்
இதேபோன்று ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஸ் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளனர். இந்த மூன்று வீரர்களுக்கும் லேசான காயம் தான் என்றும், டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு முழு உடல் தகுதியை பெற்றுவிடுவார்கள் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மாற்று வீரர்கள்
ஆஸ்திரேலிய அணி தனது முதல் டி20 உலக கோப்பை போட்டியில் வரும் 22 ஆம் தேதி நியூசிலாந்தை எதிர் கொள்கிறது. ஆனால் ஸ்டார்க்கிற்கு ஏற்பட்ட காயம் கொஞ்சம் சிரீயஸ் ஆனது என்பதால், அவர் டி20 உலககோப்பை போட்டியில் விளையாடுவது சந்தகமே. இந்த நிலையில் இந்தியா தொடருக்கு இந்த மூன்று வீரர்களுக்கு பதிலாக நாதன் எலிஸ் ஆல்ரவுண்டர் டானியல் சம்ஸ் மற்றும் சீன் அபௌட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி விவரம்
ஆரோன் பிஞ்ச் ( கேப்டன்), பாட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), சென் அப்பாட்,ஆஸ்டன் ஏகார், டிம் டேவிட், நாதன் எலிஸ், கேம்ரான் கிரின், ஹேசல்வுட், ஜாஸ் இங்லிஸ், கிளன் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ்,ஸ்மித், மேத்தீவ் வெட், ஆடம் சாம்பா


Click it and Unblock the Notifications