Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை கவனிதீர்களா?? இந்தியாவின் 3 ஸ்டார் வீரர்கள் படைக்கப்போகும் சாதனை.. இங்கி, டெஸ்டில் கலக்கல் தான்

பெர்மிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூன்று முக்கிய வீரர்கள் பெரும் சாதனையை படைக்கவுள்ளனர்.

இரு அணிகளும் மோதும் 5வது டெஸ்ட் போட்டி இன்று மதியம் பெர்மிங்கம்மில் தொடங்கவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 -1 என முன்னிலையில் உள்ள இந்திய அணி வெற்றி பெறும் முணைப்புடன் உள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

இந்திய அணியை பொறுத்தவரையில் கடந்தாண்டு விளையாடிய வீரர்களில் பெரும்பாலானோரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இதில் மிகவும் முக்கியமானவர்கள் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகும். ஏனென்றால் இவர்கள் மூவரும் இந்த போட்டியில் முக்கிய சாதனையை படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

கோலியின் வாய்ப்பு

கோலியின் வாய்ப்பு

இந்தியாவின் தூணாக பார்க்கப்படும் விராட் கோலி இன்னும் 40 ரன்களை அடித்தால், இங்கிலாந்துக்கு எதிராக 2000 ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன் அடித்தவர் பட்டியலில் தற்போது கோலி 1960 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதில் 5 சதங்களும், 9 அரைசதங்களும் அடங்கும். முதல் 2 இடங்களில் சச்சின் மற்றும் கவாஸ்கர் இருக்கின்றனர்.

பண்ட்-ன் தாண்டவம்

பண்ட்-ன் தாண்டவம்

இந்தியாவின் அடுத்த கேப்டனாக உருவெடுத்துள்ள ரிஷப் பண்ட், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனியின் பல சாதனைகளை தகர்த்து வருகிறார். அந்தவகையில் அவர் இன்னும் 80 ரன்களை அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை அடித்தவர் என்ற பெருமையை பெறுவார்.

ஜடேஜாவின் சாதனை

ஜடேஜாவின் சாதனை

இந்தியாவின் முன்னணி பவுலரான ஜடேஜா இந்த போட்டியில் 8 விக்கெட்களை கைப்பற்றினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்களை எடுத்தவர் என்ற பெருமையை பெறுவார். இங்கிலாந்து மண்ணில் அவருக்கு நல்ல அனுபவம் இருப்பதால், நிச்சயம் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, July 1, 2022, 14:15 [IST]
Other articles published on Jul 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+