Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு இடத்துக்கு 3 பேர் மோதல்.. சிக்கி திணறும் ஹர்திக் பாண்ட்யா.. முதல் டி20க்கான ப்ளேயிங் 11 குழப்பம்

வெல்லிங்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் ஒரே ஒரு இடத்திற்காக மூன்று முன்னணி வீரர்கள் போட்டிப்போட்டு வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் படுதோல்வியடைந்த இந்திய அணி, நேரடியாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.

இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால் டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்துள்ளனர்.

முதல் டி20

முதல் டி20

இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் நாளை நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணி, ப்ளேயிங் 11 குறித்த ஆலோசனைகளையும் தொடங்கியுள்ளது. பேட்டிங் வரிசை ஓரளவிற்கு செட்டான போதும், பவுலிங்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பவுலிங் சிக்கல்

பவுலிங் சிக்கல்

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் டி20 உலகக்கோப்பையில் கலக்கிய அர்ஷ்தீப் சிங் முதன்மை தேர்வாக இருக்கிறார். புவனேஷ்வர் குமார் தன்னை நிரூபிக்க கடைசி வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யாவும் பவுலிங் செய்வார் என்பதால் மீதம் ஒரே இடம் தான் இருக்கிறது. இதற்காக தான் உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் என 3 பேர் போட்டி போட்டு வருகின்றனர்.

உம்ரான் மாலிக்

உம்ரான் மாலிக்

இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படுபவர் உம்ரான் மாலிக். ஏனென்றால் இந்திய அணியில் 150 + வேகத்தில் வீசக்கூடியவர் அவர் மட்டுமே இருக்கிறார். இதுவரை 3 போட்டிகளில் விக்கெட்களை கைப்பற்றியிருக்கிறார். இவரை இந்த தொடரில் இருந்தாவது பயன்படுத்த தொடங்கினால் தான் அடுத்த டி20 உலகக்கோப்பைக்குள் தயாராக முடியும்.

குழப்பம்

குழப்பம்

இதே போல இந்தியாவின் முன்னணி பவுலராக இருந்து வரும் ஹர்ஷல் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் டி20 உலகக்கோப்பைக்காக இந்திய அணியுடன் சென்று, வெளியிலேயே தான் இருந்தனர். எனவே அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதனையெல்லாம் யோசித்து ஹர்திக் பாண்ட்யா முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Story first published: Thursday, November 17, 2022, 12:58 [IST]
Other articles published on Nov 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+