Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 நட்சத்திர வீரர்கள் இல்லை..ஷமிக்கு கூடுதல் ஓய்வு..தென்னாப்பிரிக்க தொடரில் பிசிசிஐ எடுக்கும் ரிஸ்க்!

மும்பை: தென்னாப்பிரிக்க அணியுடனான தொடருக்கான இந்திய அணியில் 3 முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி வெற்றிகரமாக முடித்துள்ளது.

இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோதவுள்ளது.

தென்னாப்பிரிக்க டி20 தொடர்

தென்னாப்பிரிக்க டி20 தொடர்

இந்த போட்டிகள் வரும் செப்டம்பர் 28ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான கடைசி கட்ட வாய்ப்பு இதுதான் ஆகும். எனவே இதனை பயன்படுத்தி இந்தியா தனது தவறுகளை செய்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது.

பலருக்கும் ஓய்வு

பலருக்கும் ஓய்வு

இந்நிலையில் அதிரடி முடிவுகளை ரோகித் சர்மா எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரில் இருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். பணிச்சுமை காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதே போல தீபக் ஹூடாவும் காயத்தினால் பாதிக்கப்பட்டதால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

பவுலிங் மாற்றம்

பவுலிங் மாற்றம்

பேட்டிங்கை போலவே பவுலிங்கிலும் ரிஸ்க் எடுத்துள்ளனர். ஆசிய கோப்பையில் இருந்தே இந்திய அணியின் பவுலிங் மோசமாக உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ள போதும், பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்படிப்பட்ட சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஷமிக்கும் ஓய்வு தரப்பட்டுள்ளதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மாற்று வீரர்

மாற்று வீரர்

இவர்களுக்கு மாற்றாக ஸ்ரேயாஸ் ஐயர், சபாஷ் அகமது, உமேஷ் யாதவ் ஆகியோர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் ஸ்ரேயாஸ் ஐயரை தவிர மற்ற இருவருமே டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதவர்கள் தான். எனவே முக்கியமான சூழலில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ரிஸ்க் எடுக்கவுள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Story first published: Tuesday, September 27, 2022, 17:56 [IST]
Other articles published on Sep 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+