3 பார்மெட்டுக்கும் ஒரு தமிழர்.. இதுதான் இனி ரூல்ஸ்.. கோலி தந்த பிரஷர்..நிரந்தர பிளானில் இந்திய அணி
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அதற்கு முன் ஒருநாள் தொடரிலும் தமிழக வீரர்கள் கலக்கிய நிலையில் கோலி முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.
சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அஹமதாபாத்தில் அடுத்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒன்றில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வென்றுள்ளது.
இதற்கு பின் டி 20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது. இதற்கான அணிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

எப்படி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர்கள் அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் சிறப்பாக ஆடி உள்ளனர். அதற்கு முன் ஒருநாள் தொடரிலும் தமிழக வீரர்கள் கலக்கினார்கள். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மூன்று பார்மேட்டிலும் நடராஜன் நன்றாக ஆடினார்.

முக்கிய முடிவு
ஆனால் இவர்கள் மூன்று பேரையும் மூன்று பார்மெட்டிலும் ஆட வைக்க முடியாது. நிறைய திறமையான வீரர்கள் இருப்பதால் இவர்களை ரொட்டேஷனை பாலிசி மூலமே பயன்படுத்த உள்ளனர். திறமையான தமிழக வீரர்கள் தொடர்பாக கேப்செட்டான கோலி முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

தகவல்
அதன்படி மூன்றுக்கு பார்மெட் போட்டிகளிலும் ஒவ்வொரு தமிழக வீரர் இருப்பார். இவர் நிரந்தரமாக இந்திய அணியில் ஆடுவார் என்று கூறப்படுகிறது. அதன்படி டெஸ்ட் அணியில் அஸ்வின் நிரந்தரமாக ஓய்வு எடுக்காமல் ஆடுவார். வாஷிங்க்டன் சுந்தர் டி 20 போட்டிகளில் ஆடுவார்.

நடராஜன்
இன்னொரு பக்கம் நடராஜன் ஒருநாள் போட்டிகளில் பும்ராவுடன் சேர்ந்து ஆடுவார் என்று கூறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு பார்மெட்டிலும் இவர்கள் நிரந்தரமாக ஆடுவார்கள். நடராஜனை டி 20 பார்மெட்டிலும் கோலி பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

பார்மெட்
டி 20 உலகக் கோப்பையில் மட்டும் மூன்று தமிழர்களும் இந்திய அணியில் தேர்வாக வாய்ப்புள்ளது. ஆனால் ஆடும் அணியில் இரண்டு பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அஸ்வின் மாற்று வீரராக இதில் இடம்பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications