ரூட்டின் இமாலய சாதனை.. 22 ஆண்டுக்கு பின் இந்தியாவுக்கு பின்னடைவு..உற்று நோக்க வேண்டிய 3 விஷயங்கள்!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்தன் மூலம் 22 ஆண்டுகால இந்தியாவின் சாதனை தகர்ந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் தொடரில் 1 -0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இந்திய வீரர்கள் அஸ்வின், புஜாரா, கோலி உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டபோதும் இங்கிலாந்து அணியை சமாளிக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து தொடரை வெல்லவும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நீடிக்கவும், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

தொடர் தோல்வி
முதல் டெஸ்டின் தோல்வியின் இதன் மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் இந்திய கேப்டன் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் 4வது தோல்வி இதுவாகும். இதற்கு முன்னர் நியூசிலாந்திடம் 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவிடம் ஒரு போட்டியும் தோல்வியடைந்துள்ளது.

ரூட்டின் சாதனை
நடந்து முடிந்த டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணி கேப்டன் ரூட்டிற்கு 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் தன் 100வது போட்டியில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், ஆசியாவில் தொடர்ச்சியாக 6வது வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ள ரூட், இங்கிலாந்து அணிக்கு 26 டெஸ்ட் போட்டிகளை வென்றுகொடுத்த மைக்கெல் வாகனின் சாதனையை சமன் செய்துள்ளார்.

வயதுதான் 38 ஆனால் புயல் வேகம்
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் ஜிம்மி ஆண்டர்சன் 2வது இன்னிங்சில் வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 வெல் செட்டில் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார். மேலும், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் அனில் கும்ளேவை மிஞ்சி 3வது இடத்திற்கு முன்னேற ஆண்டர்சனுக்கு இன்னும் இன்னும் 10 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.

உடைந்தது 22 ஆண்டு சாதனை
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சென்னையில் தோல்வி பெறுவது 22 ஆண்டுகளுக்கு பின் இது முதல் முறையாகும். இதற்கு முன்னர் 1999ல் பாகிஸ்தானிடன் தோல்வியடைந்திருந்து. சொந்த மண்ணில் கடந்த 35 போட்டிகளில் இந்திய அணி பெறும் முதல் தோல்வி இதுவாகும்.


Click it and Unblock the Notifications