ஷமி ஏற்படுத்திய தாக்கம்.. ஒரு இடத்திற்காக அடித்துக்கொள்ளும் 3 வீரர்கள்.. யாருக்கு வாய்ப்பு??
டாக்கா: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் முகமது ஷமியின் இடத்திற்காக 3 இளம் வீரர்கள் கடும் போட்டிப்போட்டு வருகின்றனர்.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வங்கதேசம் ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.
கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஆனால் அதற்குள்ளாக இந்திய அணியில் பல முன்னணி வீரர்கள் காயத்தின் காரணமாக வெளியேறியுள்ளனர்.

வங்கதேச தொடர்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயத்தால் ஒருநாள் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டார். அடுத்து வரக்கூடிய டெஸ்ட் தொடரிலாவது அவர் விளையாடுவாரா என்பது சந்தேகம் தான். இதே போல முகமது ஷமி, குல்தீப் சென், தீபக் சஹார் போன்ற வீரர்களும் காயத்தின் காரணமாக வெளியேறியுள்ளனர். ரவீந்திர ஜடேஜா இல்லாததும் பெரிய பின்னடைவு தான்.

முகமது ஷமியின் இடம்
இப்படி இருக்கையில் இந்தியா கம்பேக் கொடுக்க காத்துள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது ஷமியின் இடத்திற்காக 3 பேர் சண்டைப்போட்டு வருகின்றனர். ஒருபுறம் முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் ப்ளேயிங் 11ல் இடம் பெறுவார்கள். 3வது இடத்திற்கு தான் உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, முகேஷ் குமார் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

உம்ரான் எனும் புயல்
ஜம்மு எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் உம்ரான் மாலிக், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கலக்கினார். வங்கதேச தொடரிலும் சிறப்பாக ஆடியிருந்தார். அவரின் பவுன்சர்கள் வங்கதேசத்திற்கு எதிராக நன்கு உதவும். வங்கதேச வீரர்கள் 150+ வேகத்தில் வரும் பந்துகளை எதிர்கொள்ள திணறுகிறார்கள் எனது நன்றாக தெரிகிறது. எனவே அவர் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார்.

மற்ற 2 வீரர்கள்
மற்றொருபக்கம் நவ்தீப் சைனி மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் நல்ல தேர்வாக இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேரும் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஏ - வங்கதேசம் ஏ அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தனர். இதனால் அவர்களுக்கு களத்தை பற்றி நன்கு தெரியும் என்ற காரணத்திற்காக சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் மூவரில் யாருக்கு வாய்ப்பு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications