For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

35 வயதில் மீண்டும் கம்பேக் கொடுக்க காத்திருக்கும் 6.4 அடி உயர இந்திய பவுலர்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக களமிறங்கிய இஷாந்த் சர்மா, தற்போது, அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். 35 வயதான இஷாந்த் சர்மா, 105 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 80 சர்வதேச ஒருநாள் போட்டியில் 115 விக்கெட்டுகளையும், 165 டி20 போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

இந்த நிலையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் பாணியில் டெல்லியில் உள்ளூர் வீரர்களுக்கான டி20 தொடர் நடைபெறுகிறது. இதில், இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, களமிறங்கி தன்னுடைய திறமையை நிரூபிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார்.

cricket rishabh pant

இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம், மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப இஷாந்த் சர்மா முயற்சித்து வருகிறார். இந்த நிலையில், இளம் வீரர்களுடன் பேசிய இஷாந்த் சர்மா, டெல்லி பிரீமியர் லீக் தொடர் நடைபெறுவதை மிகுந்த எதிர்பார்ப்ஹபடன் காத்திருக்கிறேன். டெல்லியில் முதல் முறையாக இந்த தொடர் நடைபெறுகிறது.

நான் இளம் வீரர்களுக்கு சொல்லி கொள்வது ஒன்றே ஒன்று தான். தொடர்ந்து உழையுங்கள், உங்கள் திறமையை நம்புங்கள். இந்த டி20 போட்டி என்பது உங்களுக்கு சில நேரம் கொடூரமாக இருக்கும். இருப்பினும், உங்கள் உழைப்பின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தால், உங்களால் நிச்சயம் அனைத்து விதமான கிரிக்கெட் தொடரிலும் சாதிக்க முடியும்.

இதே போன்று ரிஷப் பண்ட் உடன் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடர் டெல்லி வீரர்களுக்கு வரப்பிராசதமாக இருக்கும். இஷாந்த் சர்மா தற்போது துலீப் கோப்பை தொடரில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக உள்ளூர் கிரிக்கெட் தொடரில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, அதன் பிறகு இஷாந்த் சர்மா மீண்டும் கம்பேக கொடுக்கும் முயற்சியில் உள்ளார்.

Story first published: Sunday, August 18, 2024, 23:37 [IST]
Other articles published on Aug 18, 2024
English summary
35 Year old cricketer Planing to gives come back to Indian cricket team 35 வயதில் மீண்டும் கம்பேக் கொடுக்க காத்திருக்கும் 6.4 அடி உயர இந்திய பவுலர்!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+