ஒரு ஓவரில் 6 சிக்சரெல்லாம் ஓல்டு பேஷன்…. 37 ரன்கள் எடுத்தார் டுமினி
டெல்லி: ஒரு ஓவரில் 6 பந்துகளிலும் சிக்சர் அடிப்பது எல்லாம் யுவராஜ் சிங், ஹர்ஷலே கிப்ஸ் காலத்து ஓல்டு பேஷன். ஒரு ஓவரில் 37 ரன்கள் எடுத்து புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளார் தென்னாப்பிரிக்காவின் டுமினி.
தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உள்ளூர் போட்டி ஒன்றில், ஒரு ஓவரில், 5 சிக்சருடன், 37 ரன்கள் குவித்தார் டுமினி. முதல் நான்கு பந்துகளில் சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் 2 ரன்கள், 6வது பால் நோபாலாகி 5 ரன்கள் கிடைத்து. மீண்டும் வீசப்பட்ட, கடைசி பந்தில் மற்றொரு சிக்சர் என, 37 ரன்கள் குவித்தார் டுமினி.

37 பந்துகளில் அவர் 70 ரன்கள் குவிக்க அவருடைய அணி அபார வெற்றி பெற்றது.
2013ல் டாக்காவில் நடந்த போட்டியில், வங்கதேச பவுலர் அலாவுதீன் பாபு வீசிய ஓவரில், ஜிம்பாப்வேயின் எல்டான் சிகும்புரா, 39 ரன்கள் கொடுத்ததே அதிகபட்சமாகும்.
Story first published: Saturday, January 20, 2018, 15:32 [IST]
Other articles published on Jan 20, 2018


Click it and Unblock the Notifications