கொல்கத்தா: இதுவரை நடந்த 7 ஐபிஎல் சீசன்களிலும், அணிகள் பெற்ற ரன்களில், சுமார் 62 சதவீதம் பவுண்டரி, சிக்சர் அல்லது டபுள்ஸ், டிரிபுள்ஸ் மூலமாகவே கிடைத்துள்ளதாக கூறுகிறது புள்ளி விவரம்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர், 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 8வது சீசன் இன்று தொடங்குகிறது.

ஐபிஎல் போட்டிகளை அதிகம் பேர் ரசிக்க காரணம், அதன் அதிரடி தன்மைதான். பவுண்டரியும் சிக்சருமாக பேட்ஸ்மேன்கள் பறக்கவிட, பரிதாபமாக பவுலர்கள் முழிக்கும் காட்சியை பார்க்கத்தான் இத்தனை அலப்பறைகளும்.
இந்த புள்ளி விவரத்தை பார்த்தால், பவுலர்கள் என்னபாடு படுகிறார்கள் இந்த ஐபிஎல் ஆட்டங்களில் என்ற விவரம் உங்களுக்கு தெரியும்.
2008 முதல் 2014 ஐபிஎல் தொடர்கள் வரையில், மொத்தம், 39ஆயிரத்து 727 ரன்கள் சிங்கிள்களாக எடுக்கப்பட்டுள்ளன. பேட்ஸ்மேன்கள் சந்தித்த பந்துகளில் இது 37.65 விழுக்காடு ஆகும். அப்படியானால், எஞ்சிய, சுமார் 62 விழுக்காடு ரன்கள் பவுண்டரிகள், சிக்சர்கள், டபுள்ஸ் மற்றும் டிரிபிள்ஸ் ரன்களாக கிடைத்தவையாகும். சில மட்டுமே டாட் பால்களாகும். பாவம்தான் பவுலர்கள் இல்லையா.