Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரிசையாக விக்கெட்டுகளை இழந்த இலங்கை.. மூன்றாவது நாள் டெஸ்டில் என்ன நடந்தது?

டெல்லி: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

இந்திய அணியின் பேட்டிங்கை போலவே பவுலிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது. இலங்கை வீரர்கள் இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வரிசையாக அவுட் ஆனார்கள்.

இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்திய வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. முரளி விஜய் மிகவும் சிறப்பாக விளையாடி 155 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் போட்டியிலும் தொடக்கத்தில் இருந்து மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இவர் 287 பந்துகளில் 243 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

இந்தியா டிக்ளேர்

இந்தியா டிக்ளேர்

இரண்டாம் நாள் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் 65 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 536 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட்டுகள் இழந்து இந்தியா விளையாடிக் கொண்டு இருந்த போது இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது. இந்த போட்டியில் இலங்கை பல முறை புகையை காரணம் காட்டி பிரச்சனை செய்தது.

இலங்கை அணி பேட்டிங்

இலங்கை அணி பேட்டிங்

நேற்று இறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலேயே சொதப்பியது. முதல் பந்திலேயே இலங்கையின் திமுத் கருணாரத்னி டக் அவுட் ஆனார். அதன்பின் இலங்கை அணி மிகவும் நிதானமாக ஆடியது. இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் 147 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்.

மூன்றாம் நாள் முடிந்தது

மூன்றாம் நாள் முடிந்தது

இந்த நிலையில் இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்து இருக்கிறது. இலங்கை இந்தியாவை விட 180 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இந்திய வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் எடுத்தார். முகமது சமி, ஜடேஜா, இஷாந்த் சர்மா, தலா 2 விக்கெட்கள் எடுத்துள்ளனர்.

Story first published: Monday, December 4, 2017, 16:46 [IST]
Other articles published on Dec 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+