கடைசி டெஸ்ட் போட்டி.. பேட்டிங்கில் திணறும் இந்தியா.. பவுலிங்கில் தெறிக்கவிடும் தென்னாப்பிரிக்கா!

Posted By:

ஜோஹன்ஸ்பர்க்: இந்தியா தென்னாப்பிரிக்கவிற்கு கிரிக்கெட் தொடர் விளையாட சென்று இருக்கிறது. இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே இந்த தொடரில் மோசமாக ஆடி வருகிறது.

தற்போது 3வது டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பர்க்கில் நடக்கிறது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

தற்போது இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸ் விளையாடி முடித்து இருக்கிறது. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வேண்டும்.

டாஸ் வென்றது

டாஸ் வென்றது

இந்த போட்டியில் முதல்முறையாக இந்தியா டாஸ் வென்று இருக்கிறது. ஓப்பனிங் இறங்கிய முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் தொடக்கத்திலேயே அவுட் ஆனார்கள். கோஹ்லி 54 ரன்னும், புஜாரா 50 ரன்னும் எடுத்தார்கள். இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 187 ரன்கள் மட்டும் எடுத்தது.

பேட்டிங்

பேட்டிங்

எளிதான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா ஆடியது. ஆனால் அந்த அணியின் மார்க்ராம் புவனேஷ்வர்குமார் பந்தில் தொடக்கத்திலேயே அவுட் ஆனார். வரிசையாக அனைத்து வீரர்களும் அவுட் ஆனார்கள். அம்லா மட்டும் அதிகமாக 61 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பவுலிங்

பவுலிங்

இந்திய பவுலிங் தென்னாபிரிக்க பவுலிங் போலவே அபாரமாக இருந்தது. இந்தியாவின் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட் எடுத்தார். புவனேஷ்வர்குமார் 3 விக்கெட் எடுத்தார். இருவரும் ஸ்விங் மூலம் தென்னாப்பிரிக்காவை மிரட்டினார்கள்.

இரண்டாவது இன்னிங்ஸ்

இரண்டாவது இன்னிங்ஸ்

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்டிங் சொதப்பியது. முக்கியமாக ஓப்பனிங் மோசமாக இருந்தது. அதேபோல் மிடில் ஆர்டரிலும் கோஹ்லி மட்டுமே 41 ரன் எடுத்தார். அதேபோல் ரஹானே 48 ரன் எடுத்து அவுட் ஆனார்.

சிறப்பு

சிறப்பு

அதிசயமாக இந்திய அணியின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். புவனேஷ்வர்குமார், சமி இருவரும் தென்னாப்பிரிக்க பந்துகளை தெறிக்கவிட்டார்கள். சமி வந்ததும் இரண்டு சிக்ஸ் அடித்தார். இந்தியா 2வது இன்னிங்சில் 247 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது உள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Indian team went South Africa for cricket tour. SA won first two test matches against India. Due to this SA won the series by 2-0 margin. India faces SA in 3rd test in New Wanderers Stadium, Johannesburg. India's Captain Kohli won the toss and choose to bat. In first innings India got 187-10 and SA got 194-10.
Story first published: Friday, January 26, 2018, 19:29 [IST]
Other articles published on Jan 26, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற