Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா தென்னாப்பிரிக்கா மோதும் டெஸ்ட்.. 3வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது!

கேப் டவுன்: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டி கேப்டவுனில் இருக்கும் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது. கேப் டவுனில் நடக்கும் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.

இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அதேபோல் தென்னாப்பிரிக்க அணியின் பவுலிங்கும் மிகவும் அதிரடியாக இருந்தது. தென்னாப்பிரிக்க பவுலர் ஸ்டெய்ன் போட்டியில் இருந்து விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

தென்னாப்பிரிக்க பேட்டிங் தொடக்கத்திலேயே சொதப்பியது. ஏ பி டிவில்லியர்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்கள் எடுத்து இருக்கிறது. புவனேஸ்வர்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார். அஸ்வின் 2 விக்கெட் எடுத்தார். மற்ற பவுலர்கள் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பேட்டிங் இறங்கியது

பேட்டிங் இறங்கியது

அதன்பின் களம் இறங்கிய இந்தியா மிகவும் மோசமாக பேட்டிங் செய்தது. முரளி விஜய், தவான், கோஹ்லி, ரோகித் ஷர்மா, புஜாரா, அஸ்வின் என அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இந்திய அணி எங்கு 100 ரன்களுக்குள் ஆட்டமிழக்குமோ என்று நினைத்த போது பாண்டியா மட்டும் பொறுமையாக ஆடினார்.

பாண்டியா பேட்டிங்

பாண்டியா பேட்டிங்

பாண்டியா வந்த வீரர்கள் அனைவருடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுமையாக ஆடினார். 95 பந்துகளில் 14 பவுண்டரிகள், 1 சிக்சர் உதவியோடு 93 ரன்கள் எடுத்திருந்தபோது ரபடா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியா 209 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இந்தியா பவுலிங்

இந்தியா பவுலிங்

இந்தியா பவுலிங் இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்தது. பேட்டிங்கில் கலக்கிய பாண்டிய பவுலிங்கிலும் இரண்டு விக்கெட் எடுத்தார். இரண்டாவது நாள் முடிவில் தென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் கேப் டவுனில் பெய்யும் மழையால் 3வது நாள் போட்டி கைவிடப்பட்டது.

Story first published: Sunday, January 7, 2018, 20:16 [IST]
Other articles published on Jan 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+