Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது ஒருநாள் போட்டி: இந்தியா இரண்டாவது பேட்டிங்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை பறிகொடுத்தது. இந்நிலையில் 25ம்தேதி நடைபெற வேண்டிய முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

27ம்தேதி நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரெய்னாவின் சதம், ஜடேஜாவின் பந்து வீச்சு துணையுடன் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3rd ODI: India opt to bowl, Rayudu included

இந்நிலையில் 3வது போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் சற்று முன் தொடங்கியுள்ளது. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் டோணி, தனது அணி முதலில் பந்து வீசும் என்று தெரிவித்தார். இதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. நன்றாக ஸ்விங் ஆகக்கூடிய பிட்ச் என்பதால், முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க டோணி முடிவு செய்தார்.

இந்திய அணியை பொறுத்தளவில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த ரோகித் ஷர்மாவுக்கு பதில், அம்பத்தி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக ஸ்டீவன் ஃபின் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்: டோணி, ஷிகர் தவான், அஜிங்ய ரஹானே, விராட் கோஹ்லி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, மோகித் ஷர்மா.

இங்கிலாந்து அணி விவரம்: அலிஸ்டர் குக், அலெக்ஸ் ஹேல்ஸ், இயான் பெல், ஜோ ரூட், இயோன் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோகஸ், ஜேம்ஸ் டிரட்வெல், ஸ்டீவன் ஃபின், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Story first published: Saturday, August 30, 2014, 15:41 [IST]
Other articles published on Aug 30, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+