Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்தை வெல்ல வேண்டிய நிலையில் மோதும் இந்தியா

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இதுவரை நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது. நேப்பியரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 24 ரன்களிலும் ஹாமில்டனில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை இந்தியா தழுவியது.

எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் தொடரை இந்தியா கைப்பற்ற முடியும். நாளைய போட்டியில் தோல்வியைத் தழுவினால் தொடரை இழந்துவிடும்.

Preview: 3rd ODI: New Zealand Vs India in Auckland

இந்திய அணியைப் பொறுத்தவரையில் கோஹ்லிதான் ஜொலிக்கிறார். ரெய்னா இன்னமும் சோபிக்கவில்லை. பின்வரிசை வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை தொடர்கின்றனர்.

டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் நடைபெற்ற கடந்த 5 ஒருநாள் போட்டிகளில் 4-ல் தோல்வியை தழுவியிருக்கிறது. நாளைய போட்டியில் வெல்லாமல் போனால் தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து நியூசிலாந்திலும் தொடரை இழந்த அவப்பெயரை இந்திய அணி சந்திக்க நேரிடும்.

இதனால் இந்திய அணி நாளை விவேகமான- வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Friday, January 24, 2014, 11:14 [IST]
Other articles published on Jan 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+