Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது ஒருநாள் போட்டி.. டோணி அபாரம்- 50 ஓவர் முடிவில் இந்திய அணி 303/9

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களைக் குவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் டோணி 139 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்கவில்லை.

பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 72 ரன்கள் வித்தியாசத்திலும் ஜெய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் 3-வது ஒரு நாள் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இன்றைய போட்டியிஸ் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மாவும் தவானும் களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். ஆனால் கோஹ்லி நிலைத்து ஆடினார். ரெய்னாவும் சொற்ப ரன்னில் அவுட் ஆக யுவராஜ் ரன் ஏதும் எடுக்கவில்லை.

கேப்டன் டோணி நிலைத்து ஆடி 139 ரன்களை குவித்து இறுதிவரை அவுட் ஆகாமல் இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களைக் குவித்தது.

12-ல் இந்தியாவுக்கு 8 வெற்றி

12-ல் இந்தியாவுக்கு 8 வெற்றி

இந்த மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன்பு 12 ஆட்டத்தில் விளையாடி அதில் 8 வெற்றியும், 4 தோல்வியும் சந்தித்துள்ளது.

5-ல் ஆஸிக்கு 4 வெற்றி

5-ல் ஆஸிக்கு 4 வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆடுகளம் ஓரளவு ராசியானதாகும். இங்கு அவர்கள் விளையாடியுள்ள 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

5-ல் ஆஸிக்கு 4 வெற்றி

5-ல் ஆஸிக்கு 4 வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆடுகளம் ஓரளவு ராசியானதாகும். இங்கு அவர்கள் விளையாடியுள்ள 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

3 முறை நேருக்கு நேர்

3 முறை நேருக்கு நேர்

இதே மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா 3 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறது. இதில் 2-ல் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

Story first published: Saturday, October 19, 2013, 17:46 [IST]
Other articles published on Oct 19, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+