Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி டி-20யிலும் இந்தியா வெற்றி... இலங்கையை வாஷ் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பியது!

மும்பை: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 'வான்கடே' மைதானத்தில் நடந்து வந்தது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற காரணத்தால் கடைசி போட்டியில் வெற்றி அடையும் முனைப்புடன் இலங்கை களம் இறங்கியது.

இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. இலங்கை அணியின் வீரர்கள் தொடக்கத்தில் இருந்து சொதப்பினார்கள்.

களத்தில் இறங்கிய வீரர்கள் அனைவரும் வரிசையாக அவுட் ஆனார்கள்.இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர் முடிவில் 135 ரன்கள் எடுத்தது.

ஆதிக்கம் செலுத்திய இந்தியா

ஆதிக்கம் செலுத்திய இந்தியா

இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று கணக்கில் தொடரை வென்றது.ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்று கணக்கில் வென்றது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்தியது போலவே டி-20 தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த வருடம் நடக்கும் கடைசி போட்டியாகும் இது. கட்டாக்கில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும் இது.அதேபோல் இந்தூரில் நடந்த இரண்டாவது டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்றது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என வென்றது.

136 இலக்கு

136 இலக்கு

இந்தியா இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் மாநிலம் மும்பையில் உள்ள 'வான்கடே' மைதானத்தில் நடந்தது.இந்தியாவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டை இழந்தனர். ஜெயதேவ் மற்றும் பாண்டியா தலா 2 விக்கெட் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், குலதீப் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்த நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை இந்தியாவிற்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

வெற்றி

வெற்றி

இந்த நிலையில் 136 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி இந்தியா களம் இறங்கியது. சென்ற போட்டியில் செஞ்சுரி அடித்த ரோஹித் 27 ரன்களில் அவுட் ஆனார். இந்த நிலையில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 19.2 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மேலும் 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

Story first published: Sunday, December 24, 2017, 22:46 [IST]
Other articles published on Dec 24, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+