ஆஸி.க்கு ஷாக்.. அதிரடி வீரர் ஆரோன் பின்ச் காயத்தால் விலகல்; நாளைய டி20க்கு வாட்சன் கேப்டன்
சிட்னி: இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தயாராவதற்காக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பின்ச் கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.

2வது போட்டியில், ரன் ஓடும்போது தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக, அவரால் நாளை சிட்னியில் நடைபெற உள்ள இறுதி போட்டியில் ஆட முடியாது என்பதால், ஷேன் வாட்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட் வார்னரும் ஓய்விலுள்ள நிலையில், பின்சும் ஆடாதது ஆஸ்திரேலிய அணிக்கு பலவீனமாக மாறியுள்ளது.
உலக டி20 பேட்ஸ்மேன் தர வரிசையில் கோஹ்லி 2வது இடத்திலும், ஆரோன் பின்ச் முதலிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, January 30, 2016, 13:17 [IST]
Other articles published on Jan 30, 2016


Click it and Unblock the Notifications