3வது டெஸ்ட்...மீண்டு வந்த இந்தியா... முதல் நாள் - டாப் 5 நிகழ்வுகள்
ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்டில் 31 ரன்களிலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களிலும் இங்கிலாந்து வென்றது.இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்களை எடுத்துள்ளது.

நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தின் டாப் 5 நிகழ்வுகள் இதோ:
1 சிறப்பான தொடக்கம்
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ராகுல் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 18.4 ஓவர்களில் 60 ரன்களை சேர்த்தனர். இந்த தொடரில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ரன்கள் இதுதான்.
2 அதிரடி ரஹானே
இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே சிறப்பாக விளையாடி 81 ரன்களை சேர்த்தார். ஆரம்பம் முதலே சற்று அதிரடியாக விளையாடிய ரஹானே 12 பௌண்டரிகளுடன் 81 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களை கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு விராட் கோஹ்லியுடன் இணைந்து 159 ரன்களை குவித்தார்.
3 சதத்தை தவறவிட்ட கோஹ்லி
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி நேற்று 97 ரன்களில் ஆட்டமிழந்தது சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் 90-99 ரன்களில் அவுட் ஆவது இது இரண்டாவது முறையாகும்.
4 ஆட்டம் காட்டிய வோக்ஸ்
இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்களையும் கைப்பற்றினார். இதனால் இந்திய அணி 82/3 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் பின்னர் விராட் கோஹ்லி மற்றும் ரஹானே இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
5 சிக்ஸர் நாயகன் ரிஷப் பந்த்
இந்திய அணியின் அறிமுக வீரர் ரிஷப் பந்த் இதுவரை இந்திய அணி வீரர்கள் செய்யாத ஒரு புது சாதனையை படைத்தார். நேற்று அவர் அடித்த முதல் ரன்கள் சிக்ஸர் ஆகும். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தான் அடித்த முதல் ரன்னை சிக்ஸராக அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
Story first published: Sunday, August 19, 2018, 10:59 [IST]
Other articles published on Aug 19, 2018


Click it and Unblock the Notifications