For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொகாலி டெஸ்டில் இந்திய பவுலர்கள் ஆதிக்கம்.. 268 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து

By Veera Kumar

மொகாலி: மொகாலியில் இன்று தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து நடுவேயான 3வது டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் நிலைகுலைந்த அந்த அணி, முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது.

ராஜ்கோட் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில், விசாகபட்டினத்தில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது. இதனிடையே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெறும் 3வது டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கியது.

3rd Test: England bat first, Karun Nair debuts as KL Rahul is ruled out

காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து கே.எல்.ராகுல் மற்றும் விருதிமான் சாஹா வெளியேறிய நிலையில், ராகுலுக்கு பதிலாக கருண் நாயரும், சாஹாவுக்கு பதிலாக, பார்த்திவ் பட்டேலும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தனர். இந்திய டெஸ்ட் அணியில் கருண் நாயர் இடம்பெறுவது இதுதான் முதல் முறை. 8 வருடங்களுக்கு பிறகு பார்த்திவ் பட்டேலுக்கு இடம் கிடைத்துள்ளது. எனவே இவர்கள் இருவர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.

இங்கிலாந்தில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜோஸ் பட்லர், கரேத் பட்டி மற்றும் கிரிஸ் வோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பென் டக்கெட், ஜபார் அன்சாரி, பிராட் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

மொகாலி மைதானம் பேட்டிங்கிற்கும், வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமானது என்றபோதிலும், இங்கிலாந்து வீரர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தவண்ணம் இருந்தன. தாக்குப்பிடித்த ஜானி பெய்ர்ஸ்டோ அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்து ஜெயந்த் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்ததாக ஜோஸ் பட்லர் 43 ரன்கள் எடுத்தார். பிற வீரர்கள் விரைவில் நடையை கட்டினர்.

இந்திய தரப்பில் உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஷமி மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நேர இறுதியில் அடில் ரஷித் 4 ரன்களுடனும், கரீத் பட்டி ரன் ஏதும் எடுக்காமலும் இருந்தனர். நாளை 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி, முரளி விஜய், புஜாரா, ரஹானே, பார்த்திவ் பட்டேல், அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, கருண் நாயர்.

இங்கிலாந்து அணி விவரம்: அலஸ்டியர் குக், ஹசீப் ஹமித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பெய்ர்ஸ்டோ, அடில் ரஷித், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் அன்டர்சன், கரீத் பட்டி, மொயின் அலி.

Story first published: Saturday, November 26, 2016, 18:09 [IST]
Other articles published on Nov 26, 2016
English summary
England captain Alastair Cook won the toss and elected to bat first against India in the 3rd Test here today (November 26).
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+