2011, 2015... இப்போது 2019..!!. 3வது முறையாக உலக கோப்பையில் நிகழ்ந்த சாம்பியன் அதிசயம்
லண்டன்: தொடர்ந்து 3வது முறையாக உலக கோப்பை தொடரை நடத்திய நாடு, உலக கோப்பை சாம்பியனாகி இருக்கிறது. இந்த முறை (2019ம் ஆண்டு) கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து வென்றிருக்கிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்துகேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்ததாக, இங்கிலாந்தின் ஜேசன்ராய், ஜானி பேர்ஸ்டோ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜேசன் ராய் 17 ரன்களிலும், பேர்ஸ்டோ 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய ஜோ ரூட் 7 ரன்களிலும் கேப்டன் இயான் மோர்கன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். தொடக்க வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

சரிவில் மீட்ட ஜோடி
அதன்பிறகு, ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் நிதானமாக ஆடினர். நிதானமாக ஆடி 60 பந்துகளுக்கு 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஓவர் த்ரோ ரன்கள்
அடுத்தடுத்த வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் மட்டும் நம்பிக்கையுடன் விளையாடினார். இறுதி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டும். 2 பந்துகளில் ரன் எடுக்க முடியாத ஸ்டோக்ஸ், 3வது பந்தில் 6 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்த பந்திலும், ஓவர் த்ரோ முறையில் ஆறு ரன்கள் வந்தன.

டிராவான போட்டி
5வது பந்தில் 2 ரன் ஓடும் முயற்சியில் ரஷித் ரன்அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை. பென் ஸ்டோக்ஸ் ஸ்டிரைக்கில் இருந்தார். பந்தை தட்டிவிட்டு 2இரண்டாவது ரன் ஓடும்போது, மார்க்வுட் ரன்அவுட் ஆனார். அதனால், மேட்ச் டிராவானது.

சூப்பர் ஓவர் முறை
அதனையடுத்து, சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. அதில் இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. பென் ஸ்டோக்ஸ், பட்லர் களமிறங்கினர். நியூசிலாந்து அணியின், போல்ட் பந்து வீசினார். சூப்பர் ஓவரில், ஸ்டோக்ஸ் 8 ரன்களும், பட்லர் 7 ரன்களும் எடுத்தனர்.

16 ரன்கள் வெற்றி
சூப்பர் ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், நியூசிலாந்தின் நீஷம், குப்தில் களமிறங்கினர். ஆர்ச்சர் பந்து வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்தார் நீஷம். 2வது பந்தில் சிக்ஸ் வந்தது. கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் எடுக்கவேண்டும்.

சூப்பர் ஓவரும் டை
சூப்பர் ஓவரும் டை

6 பவுண்டரிகள் அதிகம்
இதனையடுத்து, சூப்பர் ஓவர் முறையும் டை ஆனதால், நியூசிலாந்தை விட 6 பவுண்டரிகள் அதிகம் அடித்திருந்ததால், இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

2011, 2015, 2019
இங்கிலாந்து அணியின் சாம்பியன் வரலாற்றில் ஒரு சுவாரசிய சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, உலக கோப்பை தொடரில் 3வது முறையாக தொடர்ந்து, போட்டியை நடத்திய நாடே உலக சாம்பியன் ஆகி இருக்கிறது. கடந்த 2011ம் ஆண்டில் போட்டியை நடத்திய இந்திய அணி, தோனி தலைமையில் உலக சாம்பியன் ஆனது. 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட உலக கோப்பையில் அந்த நாடே சாம்பியனானது. தற்போது 2019ம் ஆண்டில் போட்டியை நடத்திய இங்கிலாந்து சாம்பியன் கோப்பையை வென்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications