Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முறைத்து பார்த்த கோலி.. மிரண்டு போன நடுவர்.. போல்ட் ஆனதை சோதித்த 3வது நடுவர்.. என்ன நடந்தது?

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி போல்ட் ஆன பின்பும் கூட மூன்றாவது நடுவர் சோதனை செய்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் புஜாரா, கோலி அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளனர். புஜாரா 21 ரன்கள் எடுத்து அவுட் ஆகியுள்ளார்.

மொயின் அலி பந்தில் கோலி டக் அவுட் ஆகியுள்ளார். இந்திய அணி 3 விக்கெட்டிற்கு 91 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.80 ரன்களை கடந்து ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி வருகிறார்.

அதிரடி

அதிரடி

இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஒரு பக்கம் அதிரடியாக ஆடி வருகிறார். ரோஹித் சர்மா ஒரு பக்கம் அதிரடியாக ஆடினாலும் இன்னொரு பக்கம் புஜாரா அவசரப்பட்டு ஆடி அவுட் ஆனார். அதேபோல் கோலி பதற்றத்துடன் களமிறங்கி டக் அவுட் ஆனார்.

எப்படி

எப்படி

அடுத்தடுத்து இரண்டு போட்டியில் கோலி இப்போதுதான் போல்ட் ஆகி உள்ளார். கடந்த இரண்டு வருடமாக கோலி பார்மில் இல்லை. இன்றும் கூட கோலி அவுட் ஆன பின் அதை கொஞ்சம் கூட நம்பவில்லை. நான் அவுட்டா என்பது போல கோலி பார்த்தார்.

கோலி

கோலி

நடுவரை கொஞ்சம் கோபமாக கோலி முறைத்து பார்த்தார். இவர் போல்ட்தான் ஆனார். ஆனாலும் நடுவரும் பதற்றம் அடைந்து குழம்பி போனார். பெயில் தானாக விழுந்து விட்டதோ என்று நடுவர் குழம்பி போனார்.

நடுவர் குழப்பம்

நடுவர் குழப்பம்

கோலி முறைத்து பார்த்ததை பார்த்து குழம்பிய நடுவர் மூன்றாவது நடுவரிடம் விக்கெட் குறித்து கேட்டார். பந்து ஸ்டம்பை மோதியதா அல்லது கீப்பர் ஸ்டம்பை எடுத்தாரா என்று நடுவர் மூன்றாவது நடுவரிடம் கேட்டார். அதன்பின் விக்கெட் விழுந்தது உறுதியானது.

 மீண்டும் இப்படி

மீண்டும் இப்படி

கோலி இரண்டாவது முறையாக இப்படி அவுட் ஆகிறார். இவர் பார்ம் அவுட்டில் இப்படி கஷ்டப்படுவது இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கோலி மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் .

Story first published: Saturday, February 13, 2021, 23:17 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+