Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து தவறு செய்த 3வது நடுவர்.. இந்தியா பக்கம் திரும்பிய போகஸ்.. சர்ச்சையில் 3வது டெஸ்ட்!

அகமதாபாத்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நடுவர் பாரபட்சமாக செயல்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை இந்திய அணி 112 ரன்களுக்கு சுருட்டி உள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 450+ ரன்களை எடுத்தால் இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நடுவர் பாரபட்சமாக செயல்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலரும் இணையத்தில் புகார் வைத்து வருகிறார்கள். முக்கியமாக இங்கிலாந்து ரசிகர்கள் மூன்றாவது நடுவர் மீது புகார்களை வைத்துள்ளனர்.

மூன்றாவது நடுவர்

மூன்றாவது நடுவர்

அதன்படி மூன்றாவது நடுவர் சுப்மான் கில் கொடுத்த கேட்சுக்கு விக்கெட் கொடுக்கவில்லை. மேலும் ரோஹித் சர்மாவின் ஸ்தம்பிட்டை சோதிக்கவில்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் லீச்சுக்கு தேவையின்றி மூன்றாவது நடுவர் விக்கெட் கொடுத்துவிட்டார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

புகார்

புகார்

மூன்றாவது நடுவர் மீது கடந்த போட்டியிலேயே புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியும் மூன்றாவது நடுவர் குறித்து ரெப்ரியிடம் புகார் அளித்தனர். இங்கிலாந்து வீரர்கள் மட்டும் இன்றி இந்திய கிரிக்கெட் விமர்சகர்கள் சிலரும் இதே புகார் அளித்துள்ளனர்.

சஞ்சய் மஞ்சிரேக்கர்

சஞ்சய் மஞ்சிரேக்கர்

கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் இதே புகாரை வைத்துள்ளார். மூன்றாவது நடுவர் முழுமையாக வீடியோவை பார்ப்பது இல்லை. அவர் அவசரப்பட்டு முடிவுகளை அறிவிக்கிறார். இது தவறு என்று கூறியுள்ளனர்.

நடுவர்

நடுவர்

இதனால் மூன்றாவது நடுவரிடம் ரெப்ரி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. முடிவை அறிவிப்பதில் தவறு நேர்வது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. மூன்றாவது நடுவர் இப்படி தவறான முடிவை அறிவிப்பது தொடர்ந்தால் கண்டிப்பாக இது பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என்கிறார்கள்.

Story first published: Thursday, February 25, 2021, 16:40 [IST]
Other articles published on Feb 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+