
பேட்டிங்கில் குறை
இந்திய அணியின் தற்போது பெரிய மைனசாக பார்க்கப்படுவது தொடக்க வீரர்கள் தான். ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் திறமையான வீரர்களாக பார்க்கப்பட்டாலும், முக்கியமான ஆட்டத்தில் இந்த ஜோடி பதற்றம் அடைந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விடுகிறது. இதன் முலம் மற்ற வீரர்களுக்கு நெருக்கடியான நிலை ஏற்படுகிறது. டி20 தரவரிசையில் நம்பர் 2வது இடத்தில் இருக்கும் சூர்யகுமார், கொஞ்சம் ஓவர் கான்பிடன்சில் இருப்பது போல் தெரிகிறது. பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆனால், அவர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிடுகிறார்.

சுழற்பந்துவீச்சில் சிக்கல்
இந்திய அணியின் அடுத்த முக்கிய பிரச்சினை சுழற்பந்துவீச்சு. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் கூட தங்களது சுழற்பந்துவீச்சு மூலம் எதிரணிக்கு நெருக்கடி தருகிறது. ஆனால் இந்திய அணியில் குறிப்பாக அக்சர் பட்டேல் ஓவரை எதிரணி வீரர்கள் ரன் குவித்து வருகின்றனர். இதே போன்று பேட்டிங்கில் ஜடேஜா இடத்தை நிரப்ப அக்சர் பட்டேல் தடுமாறுகிறார். இதனால் அவருக்கு பதில் சாஹல் அல்லது தீபக் ஹூடாவை பயன்படுத்தலாம்.

ஃபில்டிங்கில் பிரச்சினை
இந்திய அணியில் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுவது ஃபில்டிங் தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகள் பறந்து பறந்து ஃபில்டிங் செய்கின்றனர். சிக்சருக்கு செல்ல இருக்கும் பந்தை கூட தடுக்கின்றனர். ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் ஃபில்டிங் மிகவும் முக்கியம். ஆனால் இந்திய அணியில் ஃபில்டிங் குறையாகவே இருந்தது. அன்று கூட மசூத் அடித்த பந்தை அஸ்வின் பிடித்திருந்தால் ஆட்டம் தலைக்கீழ் மாறி இருக்கும்

கடைசி கட்ட ஓவர்
இந்திய அணி டெத் பவுலிங்கில் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்திருத்தாலும், இன்னும் குறைகள் இருக்க தான் செய்கிறது. பாகிஸ்தான் அணியை 140 ரன்களில் சுருட்டி இருக்கலாம். ஆனால் இந்திய விரர்கள் கூடுதலாக 19 ரன்களை அடிக்கவிட்டனர். குறிப்பாக 19 மற்றும் 20 ஓவரில் ரன்களை சிறப்பாக கட்டுப்படுத்தும் அளவிற்கு இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் இல்லை. இந்த குறையை எல்லாம் மீறி வெற்றி பெற வேண்டும் என்றால், கோலி போன்றோர் ஏதேனும் ஒரு வீரர், ஒரு போட்டியில் அதிசயமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications











