
நெருங்கும் ஆசிய கோப்பை
இந்த தொடருக்காக இந்திய அணி செய்து வந்த ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எனினும் 4 பெரும் பிரச்சினைகள் உள்ளன. ஓப்பனிங் வீரராக சேர்க்கப்பட்டுள்ள கே.எல்.ராகுல் இன்னும் ஃபார்முக்கு திரும்பவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஜிம்பாப்வே தொடருக்கு வந்த அவர், பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ஆசிய கோப்பையில் எப்படி செயல்படுவார் என்ற குழப்பம் உள்ளது.

பேட்டிங் வரிசை
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா என 7 பலமான வீரர்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரையும் ஒரே ப்ளேயிங் 11ல் சேர்க்க முடியாது. அப்படி சேர்த்தால் வெறும் 4 பவுலர்கள் மட்டுமே மீதம் இருப்பார்கள். பின்னர் ஹர்திக் பாண்ட்யா தான் 4 ஓவர்களை வீச வேண்டியிருக்கும்.

பவுலிங் படை
இந்தியாவின் பவுலிங் யூனிட்டில் முன்னணி வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இவர்கள் இல்லாததால் புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர். இதில் ஆவேஷ் கான் அதிக ரன்களை வாரி வழங்கி வருகிறார். ஜிம்பாப்வே தொடரிலும் அவரின் பவுலிங் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கோலியின் நிலைமை
இந்திய அணியில் உள்ள பெரும் சந்தேகம் விராட் கோலியின் ஃபார்ம் தான். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரை புறகணித்த கோலி, ஆசிய கோப்பைக்கு நேரடியாக களமிறங்கவுள்ளார். இதில் அவர் தனது ஃபார்மை நிரூபித்தே தீர வேண்டும். இல்லையென்றால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமையும்.


Click it and Unblock the Notifications