
அம்பத்தி ராயுடு
சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக விளங்குபவர் அம்பத்தி ராயுடு. ஆனால் ராயுடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவர் கடைசியாக கிரிக்கெட் விளையாடி 5 மாதங்கள் ஆகி விட்டது. இதனால் ராயுடு எந்த அளவுக்கு பார்மில் இருப்பார் என்று தெரியவில்லை. இது சிஎஸ்கே சிக்கலை ஏடறபடுத்தலாம். ஏனென்றால் ராயுடு தொடக்க வீரராகவோ, நடுவரிசையிலோ அதிரடியாக விளையாடினால் மட்டுமே சிஎஸ்கே அணி வெல்ல முடியும்.

தோனி
சிஎஸ்கேக்கு இருக்கும் அடுத்த பிரச்சினை தோனி தான். படித்தவுடன் அதிர்ச்சி அடைய வேண்டாம். அதற்கு காரணம் இருக்கு. தோனி கடைசியாக கிரிக்கெட் போட்டியில் விளையாடி கிட்டதட்ட ஒரு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவ்வப்போது ஜார்க்கண்ட் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். மேலும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமிலும் தோனி நன்றாகவே விளையாடினார். எனினும் போட்டியில் விளையாடுவதும், பயிற்சியில் விளையாடுவதும் முற்றிலும் வேறு. இதனால் தோனியில் பார்மை நம்பி தான் ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் உள்ளது.

பிராவோ
சிஎஸ்கேக்கு இருக்கும் அடுத்த பிரச்சினை பிராவோ இல்லாதது தான். இம்முறை பிராவோ பயிற்சியாளராக மட்டும் தான் சிஎஸ்கேவில் இடம்பெற உள்ளார். சென்னை போன்ற ஆடுகளத்தில் பிராவோ வீசும் மெதுவான பந்துகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.. மேலும் பேட்டிங்கிலும் அசத்துவார். அவருக்கு பதிலாக ஸ்டோக்ஸ் இடம்பெற்றாலும், பிராவோ போல் செய்லபடுவாரா என்பது சந்தேகமே.

வேகப்பந்துவீச்சாளர்
சிஎஸ்கே அணியில் போலிங்கர் மறறும் ஜோஸ் ஹேசல்வுட்டுக்கு பிறகு பெயர் சொல்லும் அளவில் எந்த வேகப்பந்துவீச்சாளரும் இல்லை. அதற்காக தான் கெயில் ஜேமிசனை சிஎஸ்கே தேர்வு செய்தது. தற்போது அவரும் காயம் காரணமாக போய்விட்டதால், எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டும் அளவுக்கு பவுலர்கள் இல்லை. இந்த சிக்கலை சரி செய்தால் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வெல்வதை தடுக்க முடியாது.


Click it and Unblock the Notifications











