Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டன்கள் யார்? 4 இளம் வீரர்களிடையே கடும் போட்டி

மும்பை: உலகத்திலேயே அதிக மக்களால் பார்க்க கூடிய விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட்

அந்த கிரிக்கெட்டின் தலைமை இடமாக கருதப்படக் கூடியது தான் இந்தியா. அந்த இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வகிப்பது தான் பலருக்கும் கனவாக அமையும்

ஆனால் அந்த கனவு அனைவருக்கும் மெய்ப்படுவதில்லை. கேப்டனாக இருக்கும் வீரருக்கு மவுசு அதிகம். விளம்பரம் மூலமே பணம் கோடிக் கணக்கில் கொட்டும்

‘கே.எல்.ராகுல்

‘கே.எல்.ராகுல்

தற்போது விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பிறகு அந்த இடத்திற்கு வர வாய்ப்புள்ள 4 வீரர்களில் முதலிடத்தில் இருப்பவர் கே.எல்.ராகுல். கே.எல். ராகுல் தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரில் ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக தலைமை தாங்கி, நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்தை பல முறை காட்டியுள்ளார்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இந்த பட்டியலில் 2வது இடம் பிடிக்க கூடியவர் அதிரடி வீரர் ரிஷப் பண்ட். தோனிக்கு பிறகு நல்ல அதிரடி வீரராக அணிக்குள் வந்துள்ள ரிஷப் பண்ட், டெஸ்ட் அரங்கில் தனது திறமையை ஏற்கனவே நியமித்துள்ளார். ஐ.பி.எல். தொடரிலும் டெல்லி அணியின் கேப்டனாக தவைலமை தாங்கியுள்ள ரிஷப் பண்ட், தோனியின் ஸ்டலை பின் தொடர்ந்து வருகிறார்

பிரித்வி ஷா

பிரித்வி ஷா

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது பிரித்வி ஷா.. இவரா என்று நீங்கள் நினைத்தால், அதற்கு காரணம் உள்ளது.19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை பிரித்வி ஷா தலைமையில் தான் இந்திய அணி வென்றது. மேலும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் செல்லப் பிள்ளை. இதனால் பிரித்வி ஷாவிற்கும் வாய்ப்புள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

கேப்டனாக இருக்கும் தகுதி எனக்கு உள்ளது என பல முறை நிரூபித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார். இதனால் மணமுமைடந்த ஸ்ரேயாஸ், நானும் ஒரு கேப்டன் என நிரூபித்து வர பல முயற்சிகள் எடுத்து உள்ளார். இதனால் அவருக்கும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.

Story first published: Saturday, December 18, 2021, 20:52 [IST]
Other articles published on Dec 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+