“ஐயோ.. அந்த 4 பேரு பயங்கரம் ஆச்சே” இங்கி, டெஸ்டில் இந்தியாவுக்கு இருக்கும் ஆபத்து.. தப்பிக்குமா??
பிர்மிங்கம்: இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் 4 இங்கிலாந்து வீரர்கள் எமனாக விளங்கவுள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி 2 -1 என முன்னிலை வகிக்கும் நிலையில் தொடரை கைப்பற்ற தீவிர முனைப்புடன் உள்ளது.

4 ஆபத்தான வீரர்கள்
ஆனால் இந்திய அணியின் வெற்றி கனவுக்கு இங்கிலாந்தின் 4 வீரர்கள் தடைகற்களாக இருக்கப் போகிறார்கள். ஏனென்றால் போட்டி நடைபெறும் பிர்மிங்கம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தின் முந்தைய ரெக்கார்ட்கள் அப்படி உள்ளது. ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை இங்கு சமாளிப்பது கடினம்.

பவுலிங் ஜோடிகள்
தற்போதைய இங்கிலாந்து அணியில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அதிக விக்கெட்களை எடுத்துள்ளது ஆண்டர்சன் - பிராட் ஜோடி தான். இவர்கள் இருவரும் சேர்ந்து இங்கு 21 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்களை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக இவர்கள் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் எமனாக விளங்கியுள்ளனர்.

பேட்டிங்கில் கெத்து
தற்போதைய இங்கிலாந்து வீரர்களில், இந்த மைதானத்தில் அதிக ரன் அடித்தவர் ஜோ ரூட் தான். இதுவரை இங்கு 6 போட்டிகளில் விளையாடி 496 ரன்களை குவித்துள்ளார். இந்த பட்டியலில் ஜானி பேர்ஸ்டோ 248 ரன்களுடன் 3வது இடத்தில் இருந்து வருகிறார். இவர்கள் 4 பேருமே தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக உள்ளது.

இங்கிலாந்தின் சாதனை
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை 53 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 28 முறை வெற்றி கண்டுள்ளது. எதிரணி 10 முறை மட்டுமே வென்றுள்ளது. 15 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications