Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி "ஹால் ஆப் ஃபேம்"... எங்க "கடவுளை" மட்டும் இன்னும் காணோமே.. ஏக்கத்தில் ரசிகர்கள்!

லண்டன்: ஐசிசியின் "ஹால் ஆப் ஃபேம்" வரிசையில் இந்திய வீரர்கள் வரிசையில் நான்கு பேர் இடம் பிடித்துள்ளனர். இருப்பினும் கிரி்க்கெட் ரசிகர்களால் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் மட்டும் இதில் இன்னும் இடம் பெறவில்லை.

இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை ஹால் ஆப் ஃபேமில் இணைப்பதாக ஐசிசி இன்று அறிவித்தது. இந்தப் பட்டியலில் இணையும் முதல் இலங்கை வீரர் இவர்தான்.

இந்தியத் தரப்பில் இதுவரை 4 பேர் மட்டுமே இந்தக் கெளரவத்தைப் பெற்றுள்ளனர். அந்த நான்கு பேருமே பெரும் ஜாம்பவான்கள் ஆவர். ஒவ்வொருவரும் ஒரு வகையில் அசத்தியவர்கள்.

2009ம் ஆண்டு முதல்

2009ம் ஆண்டு முதல்

ஐசிசியின் ஹால் ஆப் ஃபேம் கெளரவம் 2009ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. முதல் ஆண்டில் சர்வதேச அளவில் 55 வீரர்கள் இப்பட்டியலில் இணைக்கப்பட்டனர். அதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் ஆவர். பிஷன் சிங் பேடி, கபில் தேவ், கவாஸ்கர் ஆகியோரே அவர்கள்.

பிஷன் சிங் பேடி

பிஷன் சிங் பேடி

இந்தியா கண்ட மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பிஷன் சிங் பேடி முதல் பட்டியலில் இடம் பெற்ற 55 பேரில் ஒருவர். 1966ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு இவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். மொத்த டெஸ்ட் போட்டிகள் 67.

கபில் தேவ்

கபில் தேவ்

இந்தியாவின் மாபெரும் கேப்டன்களில் மகத்தானவரான கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 1979 முதல் 1994 வரை ஆடியுள்ளார்.

கவாஸ்கர்

கவாஸ்கர்

இந்தியாவின் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் கவாஸ்கர். 1971 முதல் 1987 வரை டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச அளவில் முதல முறையாக டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள் குவித்த சாதனையாளர்.

கும்ப்ளே

கும்ப்ளே

அனில் கும்ப்ளே இதில் நான்காவது சாதனையாளராக 2015ல் இணைந்தார். 1990 முதல் 2008 வரை கிரிக்கெட் ஆடியவர் இவர். இந்தியாவிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய வீரர் இவர்தான். தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

சச்சின் இன்னும் சேரவில்லை

சச்சின் இன்னும் சேரவில்லை

இந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் இன்னும் சேர்க்கப்படவில்லை. உலக கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்த பெரிய வீரர் சச்சின். அவர் படைத்த சாதனைகள் பல இன்னும் பல வருடங்களுக்கு அப்படியேதான் இருக்கும். ஆனால் இன்னும் சச்சினுக்கு ஹால் ஆப் ஃபேம் கெளரவம் இன்னும் தரப்படாமல் உள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஜாஸ்தி

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஜாஸ்தி

இந்தப் பட்டியலில் இங்கிலாந்துதான் முதலிடத்தில் உள்ளது. அதாவது அந்த நாட்டைச் சேர்ந்த 26 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர். அடுத்த இடத்தில் 21 பேருடன் ஆஸ்திரேலியா உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்து 19 பேர் இடம் பிடித்துள்ளனர். பாகிஸ்தான் 5, இந்தியா 4, நியூசிலாந்து 3, தென் ஆப்பிரிக்கா 2, இலங்கை 1.

Story first published: Wednesday, July 27, 2016, 15:16 [IST]
Other articles published on Jul 27, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+