Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் தலைவிதியே இவங்க கையில் தான்.. ஆசிய கோப்பையில் கலக்க போகும் 4 பந்துவீச்சாளர்கள்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பலமான அணியாக இந்தியா விளங்குகிறது. இந்த தொடரை இந்தியா வெல்வதற்கே அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Asia Cup 2022: India ஏன் Win பண்ண முடியும்? | Aanee's Appeal

எனினும் டி20 கிரிக்கெட் பொறுத்தவரை யார் வெற்றி பெறுவார்? யார் தோல்வி அடைவார் ? என்று எதையும் கணிக்க முடியாது. எந்த சூழல் எப்படி வேண்டுமானாலும் முடிவுகள் மாறலாம்.

இந்த நிலையில் ஒரு அணிக்கு வெற்றியை தேடி தருவது பேட்ஸ்மேனை விட பந்துவீச்சாளர்கள் தான். இதனால் ஆசிய கோப்பையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நான்கு இந்திய பந்துவீச்சாளர்கள் குறித்து தற்போது காணலாம்.

புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார்

பும்ரா இல்லாத நிலையில் இந்திய பந்துவீச்சு ஒட்டுமொத்தமாக நம்பி இருப்பது புவனேஸ்வர் குமாரை மட்டும்தான். புது பந்தில் திறம்பட வீசக்கூடிய புவனேஸ்வர் குமார் ரன்களையும் நன்றாக கட்டுப்படுத்துவார். தொடக்க கட்டத்தில் புவனேஸ்வர் குமார் எப்படி ஓவர் வீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கிறார் என்பது பொருத்தே இந்தியாவின் வெற்றி அமையும். மேலும் புவனேஸ்வர குமார் இறுதி கட்டத்திலும் தற்போது பந்து வீசி அணியின் வெற்றிக்கு உதவுகிறார்.

ஆர்ஸ்தீப் சிங்

ஆர்ஸ்தீப் சிங்

ஹர்சல் பட்டேல் காயம் காரணமாக இல்லாத நிலையில் அவரைப் போலவே சிறப்பாக பந்து வீசக் கூடியவர் ஆர்ஸ்தீப் சிங். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் சமீப காலமாக டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்கள் கொடுத்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக t20 தொடரிலும் ஆர்ஸ்தீப் சிறப்பாக வீசினார். இறுதிக்கட்டத்தில் யாக்கர்களையும் திறன் பட வீசுகிறார். இதனால் இந்தியாவின் இரண்டாவது தூணாக ஆர்ஸ்தீப் சிங் விளங்குகிறார்.

சாஹல்

சாஹல்

துபாய் ஆடுகளும் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படும். இதனால் இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை வீழ்த்தினால் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோற்றத்துக்கு சாஹல் போன்ற ஒரு வீரர் இல்லாததே காரணம் என்ற விமர்சனம் இருந்தது. லெக்ஸ்பின் வீசக்கூடிய சாஹல் பத்துவீச்சை , அடித்து ஆட எதிரணி வீரர்கள் முற்படும் போது ஆட்டமிழப்பார்கள். சாஹலை இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் கருவியாக ரோகித் சர்மா பயன்படுத்துவார்.

ஜடேஜா

ஜடேஜா

இதேபோன்று அதிரடி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய கருவியாக திகழ்வார். பேட்டிங்கில் அதிரடியாக ஆடக்கூடிய ஜடேஜா பந்துவீச்சிலும் கட்டுக்கோப்பாக பந்து வீசி எதிரணிக்கு நெருக்கடி தர வேண்டும். முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்க வேண்டிய பொறுப்பு ஜடேஜாவுக்கு உள்ளது. ஜடேஜா எவ்வாறு பந்து வீசுகிறார் என்பது பொறுத்து இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.

Story first published: Wednesday, August 24, 2022, 19:48 [IST]
Other articles published on Aug 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+