For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விட்றாதீங்க தம்பிகளா.. தலையெழுத்தை மாற்ற போகும் ஜிம்பாப்வே தொடர்.. 4 இந்திய வீரர்களின் எதிர்காலம்

மும்பை: இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தொடரில் 2 சீனியர் வீரர்களை தவிர முற்றிலும் இளம் வீரர்களை வைத்து இந்திய அணி, ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது.

இதனால், இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 4 வீரர்களின எதிர்காலமும், இந்த தொடரை தான் நம்பி இருக்கிறது.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஆக காத்திருக்கும் வீரர்களின் வரிசையில் முதன்மையாக இருப்பவர் கேஎல் ராகுல் தான். இதனால் தான் ரோகித் சர்மாவிடம் இருந்து கற்று கொள்வதற்கு ஏதுவாக கேஎல் ராகுலை துணை கேப்டனாக பிசிசிஐ நியமித்தது. தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தின் போது ராகுல் கேப்டனாக இருந்த போது இந்திய அணி ஒரு போட்டியில் கூட அவரது தலைமையில் வெற்றி பெறவில்லை. இதனால் ஜிம்பாப்வே தொடரில் ராகுல் எப்படி செயல்படுகிறாரோ, கேப்டனாக அவருடைய எதிர்காலம் அமையும்.

தீபக் ஹூடா

தீபக் ஹூடா

அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்துவீச்சு போன்ற திறமையால் இந்திய அணியில் தற்போது தீபக் ஹூடாவுக்கு இடம் கிடைத்துவிட்டது. அவ்வளவு என், சீனியர்கள் இடம்பெற்ற ஆசிய கோப்பை அணியிலும் இடம் பிடித்துவிட்டார். இந்த நிலையில், ஒருநாள் அணியிலும் சரி, டி20 அணியிலும் சரி, இந்திய அணியின் நடுவரிசையில் நீண்ட காலமாகவே ஒரு நிலையான வீரர் இல்லை. தற்போது ஜிம்பாப்வே தொடர் மூலம் நடவரிசையில் தனது இடத்தை சிமெண்ட் போட்டு உறுதி செய்து கொள்ள ஹுடாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆவேஷ் கான்

ஆவேஷ் கான்

கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை போல, சிறந்த பவுலரும், மோசமான பவுலருமாக செய்த கலவையாக விளங்குகிறார் ஆவேஷ் கான். ஆவேஷ் மீது ரோகித், டிராவிட் கூட்டணி அதீத நம்பிக்கை வைத்தது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் சொதப்பினாலும், கடைசி போட்டியில் ஃபார்மை மீட்டார். தற்போது ஜிம்பாப்வே தொடரில் அவர் எப்படி செயல்படுகிறாரோ என்பதை பொறுத்து தான் ஆவேண் கானின் எதிர்காலம் அமையும்.

Recommended Video

India அணியின் Captain-ஆக KL Rahul பெயர் அறிவிப்பு | IND vs ZIM *Cricket
குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

ஒரு காலத்தில் இந்திய அணியின் நம்பிக்கை தரும் சுழறபந்துவீச்சாளராக இருந்த குல்தீப் யாதவ் பிறகு, காயம், ஃபார்ம் அவுட் காரணமாக அணியில் தனது இடத்தை இழந்தார். தற்போது 12 மாத இடைவெளியின் 2 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், தனது மேஜிக் பந்துவீச்சு மூலம் மீண்டும் இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்ய ஜிம்பாப்வே தொடர் நல்ல வாய்ப்பாக அமையும்.

Story first published: Friday, August 12, 2022, 12:12 [IST]
Other articles published on Aug 12, 2022
English summary
4 Indian Players Future Plays a key role in Zimbabwe series விட்றாதீங்க தம்பிகளா.. தலையெழுத்தை மாற்ற போகும் ஜிம்பாப்வே தொடர்.. 4 இந்திய வீரர்களின் எதிர்காலம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+