For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது தான் கடைசி டி20 உலககோப்பை - 4 இந்திய அணி வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது..பிசிசிஐ அதிரடி முடிவு

அடிலெய்ட் : 2022 டி20 உலககோப்பை தொடர் தான் 4 இந்திய அணி வீரர்களுக்கு கடைசி உலக கோப்பையாக இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலககோப்பையில் இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி தொடரில் இந்தியா படுதோல்வியை தழுவியது.

இதன் மூலம் இந்திய அணியில் உள்ள சில வீரர்கள் இனி டி20 போட்டிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஒரு சிலர், அடுத்த டி20 உலககோப்பைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என தெரிகிறது.

புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார்

இந்திய அணியின் ஸ்விங் பவுலரான புவனேஸ்வர் குமார், டி20 கிரக்கெட் பவர்பிளேவில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர். ஆனால், புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு ஸ்விங் பவுலிங்கிற்கு ஏற்ற மைதானத்தில் மட்டும் தான் செயல்படுகிறது. அடுத்த டி20 உலககோப்பை வெஸ்ட் இண்டீசில் 2024ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதற்கு புவனேஸ்வர் குமார் பந்துவீச்சு சரிப்பட்டு வராது.

முகமது ஷமி

முகமது ஷமி

32 வயதான முகமது ஷமியை ஏற்கனவே இந்த டி20 உலககோப்பையில் பிசிசிஐ சேர்க்கவில்லை. ஆனால் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால் மட்டுமே அணிக்குள் ஷமி வந்தார். புதுமுக பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் அணிக்குள் வர இருப்பதால், இனி அவருக்கு டி20 உலககோப்பை மற்றும் டி20 அணியில் இடம் கிடைப்பது கஷ்டம் தான்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

37 வயதான தினேஷ் கார்த்திக், தற்போது டி20 அணியில் உள்ள வயதான வீரராக இருக்கிறார். ஏற்கனவே அரையிறுதி போன்ற முக்கிய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கை இந்திய அணி சேர்க்கவில்லை. இதனால் அடுத்த டி20 உலககோப்பை வரும் போது இவருக்கு வயது 39 ஆகிவிடும். இதனால், இதுவே இவருக்கு கடைசி டி20 உலககோப்பையாக இருக்கும்.

அஸ்வின்

அஸ்வின்

36 வயதான சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், டி20 உலககோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வயது மூப்பு மற்றும் போதிய தாக்கத்தை ஆட்டத்தில் ஏற்படுத்தாத காரணத்தால் இந்திய டி20 அணியில் இனி வாய்ப்பு கிடைப்பது கடினம்.

Story first published: Thursday, November 10, 2022, 19:19 [IST]
Other articles published on Nov 10, 2022
English summary
4 Indian Players Might Played in Last t20 world cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+