Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து அணிக்காக ஆடும் 4 இந்திய வீரர்கள்.. டிராவிட்டின் சூப்பர் ப்ளான்.. காரணம் என்ன??

இங்கிலாந்து அணியில் இந்தியாவின் முக்கிய வீரர்கள் பங்கேற்று விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது.

இங்கிலாந்து களத்தை புரிந்துக்கொள்வதற்காக ஸ்பெஷல் பயிற்சி போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

லெய்செஸ்டர்சையர் நகரத்தில் உள்ள கவுண்டி அணி மற்றும் இந்திய அணி 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் மோதுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி ஜூன் 24ம் தேதி தொடங்கவிருந்த நிலையில் திடீரென இன்றே ( ஜூன் 23 ) க்கு மாற்றப்பட்டது. மழை காரணமாக முன்கூட்டியே நடத்தப்படுகிறது.

டிராவிட்டின் விருப்பம்

டிராவிட்டின் விருப்பம்

இந்த போட்டியில் முழு பலத்துடன் இந்திய அணியை களமிறக்க போவதாக ராகுல் டிராவிட் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் அறிவித்ததற்கு மேலாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது இந்திய அணியின் முன்னணி வீரர்களான புஜாரா, ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 வீரர்கள் கவுண்டி அணிக்காக விளையாடவுள்ளனர்.

இறுதி டிவிஸ்ட்

இறுதி டிவிஸ்ட்

இந்திய அணியில் அனைத்து வீரர்களும் பயிற்சி ஆட்டத்தில் பங்கு பெற வேண்டும் என்பது டிராவிட் விருப்பம். எனவே இங்கிலாந்து வாரியத்திடம் அனுமதி வாங்கிய பிசிசிஐ, 4 வீரர்களை மட்டும் எதிரணிக்கு அனுப்பியுள்ளது. தற்போது சுழற்சி முறையில் இல்லாமல், அனைத்து வீரர்களும் ஆட்டம் முழுவதுமாக விளையாடவுள்ளனர்.

எப்படி பார்க்கலாம்

எப்படி பார்க்கலாம்

இரு அணிகளும் மோதும் இந்த பயிற்சி ஆட்டம் எந்தவொரு தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பப்படாது. ஃபாக்ஸ் தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Story first published: Thursday, June 23, 2022, 11:36 [IST]
Other articles published on Jun 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+