
பயிற்சி ஆட்டம்
ஒருவேளை பயிற்சி ஆட்டங்களில் விளையாடி இருந்தால் சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என்று மனதளவில் ஒரு தெளிவு பிறந்து இருக்கும். எப்போதும் வலைப் பயிற்சி செய்வதை விட பயிற்சி ஆட்டத்தில் விளையாடி ரன்கள் சேர்ப்பது நல்லது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பிக் பேஸ் லீக் தொடரில் விளையாடாமல் இரண்டு வாரத்திற்கு முன்பு இந்தியா வந்து இருந்தது, இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி இருக்க வேண்டும்.

தேவையில்லாத பயம்
அப்படி செய்திருந்தால் ஒரு அளவுக்கு தாக்குப் பிடிக்க முடிந்திருக்கும். இதனை தான் மைக்கேல் கிளார்க் முன்பே கூறியிருந்தார். ஆனால் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி பயனில்லை என ஸ்மித் கூறியது தற்போது தவறு என்று மாறிவிட்டது. ஆங்கிலத்தில் ஓவர் திங்கிங் இஸ் இஞ்சுரியஸ் டு ஹெல்த் என்று சொல்லுவார்கள். இதைதான் ஆஸ்திரேலியா செய்துள்ளது. ஆடுகளம் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என பயந்து பல்வேறு பயிற்சிகளை அவர்கள் செய்தார்கள். ஆனால் பந்து எதிர்பார்த்த அளவு திரும்பாமல் நேராக வந்தது.

எதிரிகளின் பலம்
இதனை ஆஸ்திரேலியா வீரர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் எந்த அச்சமும் இல்லாமல் நம்பிக்கை உடன் சாதாரணமாக பயிற்சி செய்திருந்தாலே அவர்கள் இந்த அளவுக்கு தோல்வியை தழுவ வேண்டியதில்லை. மேலும் அஸ்வின் நம்மை ஆட்டமிழக்க செய்து விடுவார் என்று அஸ்வின் மீது கவனம் செலுத்தி மற்ற சுழல் பந்துவீச்சாளர்களின் பலத்தை ஆஸ்திரேலிய வீரர்கள் கவனிக்க தவற விட்டார்கள்.எப்போதுமே கிரிக்கெட்டில் எதிராளியின் பலம் என்ன அதனை எப்படி எதிர்கொள்வது என்பதை கவனம் செலுத்துவதை விட நமது பலம் என்ன அதை எப்படி மேலும் பலப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

டிராவிஸ் ஹேட்
மேலும் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது நாம் சரியாக விளையாடுகிறோமா பந்து திரும்பினால் என்ன செய்வது என்று சந்தேகம் இருந்தாலே அங்கேயே ஆட்டம் குளோஸ் ஆகிவிடும். இதனால் அடுத்த போட்டியில் ஆவது ஆஸ்திரேலியா அணி இந்த தவறை செய்யாமல் அதிரடியாக விளையாட வேண்டும். இதேபோன்று டிராவஸ் ஹெட் போன்ற திறமையான வீரருக்கு வாய்ப்பு வழங்காமல் ஆஸ்திரேலியா அணி பெஞ்சில் அமர வைத்தது தவறாக கருதப்படுகிறது.

வார்னர் சர்ச்சை
மேலும் டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் கேப்டன்ஷிப் விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் மிகவும் தவறாக நடத்தப்பட்டார். இதனால் அவருடைய கவனம் கொஞ்சம் கூட கிரிக்கெட்டில் இல்லாதது தெரிந்தது. இப்படி பல்வேறு சிக்கல்களை ஆஸ்திரேலியா சந்திக்க நேர்ந்தது தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











