Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றியின் வாசல் வரை அழைத்து சென்ற சாம்சன்.. இந்தியா சறுக்கியது எங்கே.. இந்திய அணியின் 4 தவறுகள்

லக்னோ : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் போராடி இந்திய அணியை வெற்றியின் கதவு வரை அழைத்து சென்றார்.

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 40 ஓவர் முடிவில் 249 ரன்களை எடுத்தது. 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது.

சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். எனினும் மற்றவர்கள் சொதப்பியதால் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஃபில்டிங் சொதப்பல்

ஃபில்டிங் சொதப்பல்

இந்திய அணி தோல்வி தழுவியதற்கு முக்கிய காரணம், கேட்ச்களை விட்டது தான். ஆவேஷ் கான் வீசிய ஒரே ஓவரில் முகமது ஷமி, பிஸ்னாய் ஆகியோர் அடுத்தடுத்து 2 கேட்ச்களை விட்டனர். மேலும் அதே ஓவரில் இஷான் கிஷன் ஃபில்டிங்கில் கோட்டை விட்டு ஒரு பவுண்டரியை தவறவிட்டார். இதனால் அந்த ஓவரில் தேவையில்லாமல் 16 ரன்கள் சென்றது. அதில் தென்னாப்பிரிக்காவை 10 ரன்கள் கூடுதலாக அடிக்கவிட்டது தோல்வியாக பார்க்கப்படுகிறது.

திருப்புமுனை

திருப்புமுனை

இதே போன்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மோசமாக விளையாடினர். தவான் 4 ரன்களிலும், சுப்மான் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பிறகு ருத்துராஜ் டெஸ்ட் இன்னிங்ஸ் போல் ஆடினார். அதில் தவறு இல்லை என்றாலும், அவ்வளவு கஷ்டப்பட்டு ஆடி 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் 16 பந்துகளுக்கு 40 ரன்கள் அடித்த நிலையில் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்தார். இது பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ரன் ஓடியதில் தவறு

ரன் ஓடியதில் தவறு

ஆட்டத்தின் 38.3 வது ஓவரில் ஆவேஷ் கான் தூக்கி அடித்த பந்தில், அவர் 2 ரன்கள் ஓடினார். அந்த ஓவரில் வெறும் 7 ரன்களே சென்றது. ஆவேஷ் கான் 4 பந்துகளை எதிர்கொண்டு வீணடித்துவிட்டார். அவர், ஒரு சிங்கிள் எடுத்து சஞ்சு சாம்சனிடம் கொடுத்து இருந்தால் கூட அவர் கூடுதலாக ஒரு 10 ரன்களை அடித்திருப்பார்.

அணி தேர்வில் தவறு

அணி தேர்வில் தவறு

இதே போன்று இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஒரு பேட்ஸ்மேன் இலலாமல், வெறும் 6 பேட்ஸ்மேன், 5 பவுலர்களுடன் களமிறங்கியது. இது பெரும் தவறான யுத்தி. ஆல்ரவுண்டரான ஷாபாஸ் அகமது அணியில் இருக்கும் போது அவரை சேர்க்காமல் , ரவி பிஸ்னாயை சேர்த்தனர். இதனால் இந்தியாவுக்கு ஒரு பேட்ஸ்மேன் இல்லாமல் போய்விட்டது.

Story first published: Thursday, October 6, 2022, 23:37 [IST]
Other articles published on Oct 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+