“4 தீரா பகைகள்..” இந்த முறை ஒரே பரபரப்பு தான்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்டில் இதை கவனியுங்கள்!!
பிர்மிங்கம்: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் 4 தீரா பகைகள் பெரும் கவனத்தை ஈர்க்கவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி தொடங்கவுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 - 1 என்ற சூழலில் இருக்கும் இந்திய அணி தொடரை கைப்பற்ற ஆர்வத்துடன் காத்துள்ளது. அதே சமயம் இங்கிலாந்து அணியும் அசுர பலத்தில் உள்ளது.

4 சண்டை
இந்நிலையில் இதில் 4 தீரா பகைகள் கவனம் பெறவுள்ளது. இதில் முதலாவது விராட் கோலி - ஆண்டர்சன் தான். இவர்கள் இருவருக்குள் எப்போதுமே ஒரு தனி சண்டை போகும். கடந்த 2014ல் ஒரே டெஸ்டில் கோலியை 4 முறை ஆண்டர்சன் அவுட்டக்கினார். அதன்பின் 2018ல் கோலி
593 ரன்கள் அடித்து தரமான கம்பேக் தந்தார். ஆண்ட்ர்சனிடம் அவுட்டே ஆகவில்லை. 2021-லும் இதே கதை தான். எனவே பழிதீர்க்க ஆண்டர்சன் காத்துள்ளார்.

அஸ்வின் - ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இதுவரை 12 முறை அஸ்வினிடம் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். அஸ்வினை அவரால் சமாளிக்கவே முடிந்ததில்லை. இந்த போட்டியில் ஸ்டோக்ஸ் சற்று நிலைத்துவிட்டால், பின் டேஞ்சராகிவிடுவார். ஒருவேளை அஸ்வின் முன்கூட்டியே ஸ்டோக்ஸின் விக்கெட்டை எடுத்துவிட்டால், ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பிவிடும். எனவே இந்த சண்டைதான் திருப்புமுணை தரும்.

புஜாரா - ஸ்டூவர்ட் பிராட்
புஜாரா மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தான் இரு அணிகளின் தூண்கள். இருவருமே தற்போது நல்ல ஃபார்மில் உள்ளனர். ஒருவேளை புஜாரா மட்டும் நிலைத்துவிட்டால், இங்கிலாந்துக்கு பெரும் சிரமம் ஏற்படும். ஆனால் ஸ்டூவர்ட் பிராட்டை எப்படி அவர் சமாளிக்க போகிறார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

பும்ரா - ரூட்
கடைசி மற்றும் தரமான போட்டி என்றால் பும்ரா மற்றும் ஜோ ரூட் தான். நியூசிலாந்து தொடரில் ஜோ ரூட் 3 போட்டிகளில் 398 ரன்களை அடித்துள்ளார். மற்றொருபுறம் பும்ரா இங்கிலாந்தில் வியப்பூட்டும் ரெக்கார்டை வைத்துள்ளார். ரூட்டை இதுவரை 6 முறை இங்கிலாந்து மண்ணிலேயே விக்கெட் எடுத்துள்ளார். எனவே இவர்களின் ஆட்டமும் கவனிக்கப்படும்.


Click it and Unblock the Notifications