For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓ மை காட்.. ஐசிசி-ன் 4 புது விதிமுறைகள்.. டி20 உலகக்கோப்பையில் முதல் முறை.. அணிகளுக்கு பின்னடைவு!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை இல்லாத 4 முக்கிய ஐசிசி-ன் விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.

கிரிக்கெட் திருவிழாவாக பார்க்கப்படும் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் சூழலில், ஐசிசி-ன் புதிய விதிகளுக்கும் தயாராக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ரன்னிங் அவுட்

ரன்னிங் அவுட்

சமீபத்தில் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சர்ச்சையாகி இருப்பது நான் ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்வது தான். பந்துவீசுவதற்கு முன்பாக எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன் கிறீஸை விட்டு வெளியேறினால் ரன் அவுட் செய்யலாம். இது கிரிக்கெட்டின் ஆன்மாவிற்கு எதிரானது என விமர்சனங்கள் இருந்த சூழலில் இதுவும் இனி 'ஒரு ரன் அவுட்' தான் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே இதனை பல போட்டிகளில் பார்க்கலாம்.

ஸ்லோ ஓவர்

ஸ்லோ ஓவர்

எந்த அணியாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் 19 ஓவர்களை வீசியிருக்க வேண்டும். ஒருவேளை நேரம் அதிகமாக எடுத்துக்கொண்டால், மீதமுள்ள அனைத்து ஓவர்களிலும் ஒரு கூடுதல் ஃபீல்டரை வட்டத்திற்கு உள்ளே கொண்டு வந்து நிற்கவைக்க வேண்டும். கடந்த ஆசிய கோப்பையில் இந்த விதியால் ஆட்டத்தின் முடிவுகளே மாறியது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கிற்கு ஆப்பு

பேட்டிங்கிற்கு ஆப்பு

அனைத்து அணிகளுக்கும் பேட்டிங்கில் பெரிய ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பேட்ஸ்மேன் பந்தை தூக்கி அடித்துவிட்டு கேட்ச் பிடிப்பதற்குள் ரன் ஓடியிருந்தால், அடுத்த பந்தில் எதிரில் இருந்த பேட்ஸ்மேன் தான் விளையாடுவார். ஆனால் இனி கேட்ச்-க்கு போனால் புதிதாக வரும் பேட்ஸ்மேன் தான் அடுத்த பந்தை சந்திக்க வேண்டும். இது கடைசி ஓவர்களில் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பேட்ஸ்மேனின் உரிமை

பேட்ஸ்மேனின் உரிமை

பந்துவீசும் போது பேட்ஸ்மேனின் உடல் அல்லது பேட் ஏதேனும் ஒன்று பிட்ச்-க்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் அதை டெட் பாலாக ( பந்து ரத்து ) அறிவிக்கப்படும். இதே போல ஒரு பந்து பேட்ஸ்மேனை பிட்ச்-க்கு வெளியில் நகர்த்தும்படி செய்துவிட்டாலும் அதனை ஏற்க முடியாது எனவும், மீண்டும் வீச வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Story first published: Thursday, October 13, 2022, 8:58 [IST]
Other articles published on Oct 13, 2022
English summary
4 New rules that ICC implement in the t20 world cup 2022, great Impacts for All teams
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+