Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு அணியில் இத்தனை தொடக்க வீரர்களா ? அறிமுக போட்டியிலேயே ருத்துராஜ்க்கு நெருக்கடி. மற்றவர்கள் கதி ?

லக்னோ : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் பல்வேறு தொடக்க வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

2011ஆம் ஆண்டு உலககோப்பை போட்டியில் இந்திய அணியில் சேவாக் , சச்சின் என இரண்டு ஜாம்பவான்கள் இருந்தனர்.

இதனால் மற்றொரு தொடக்க வீரரான கம்பீர் 3வது இடத்தில் விளையாடினார். ஆனால் அதையே மிஞ்சும் அளவுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 4 தொடக்க வீரர்களை வைத்து விளையாடுகிறது.

சுப்மான் கில்

சுப்மான் கில்

இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான், சுப்மான் கில், ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் என 4 வீரர்கள் உள்ளனர். இதில் சுப்மான் கில்லை தவிர மற்ற அனைவரும் தொடக்க வீரர்களாக தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர்கள். ஆனால் சுப்மான் கில் கோலியை போன்ற 3வது வீரராக களமிறங்குபவர்.

தொடக்க வீரர்

தொடக்க வீரர்

ஆனால் தொடக்கத்தில் விளையாட ஆளே இல்லை என்பது போல் சுப்மான் கில்லை தொடக்க வீரராக களமிறக்கிவிட்டார்கள். ஆனால், அவருக்கு கோலியை போல் 3வது இடத்தில் நன்றாக விளையாட வரும். ஆனால், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் தொடக்க வீரராக களமிறங்குகிறார், டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் என்பதற்காக சுப்மான் கில்லை இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறக்குகிறார்கள்.

நெருக்கடியில் ருத்துராஜ்

நெருக்கடியில் ருத்துராஜ்

ஆனால், ருத்துராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக விளையாட கூடியவர். சிஎஸ்கே அணிக்காக கூட சுப்மான் கில் தொடக்க வீரராக தான் களமிறங்கி அவரது திறமையை நிரூபித்து இருக்கிறார். விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்டிராவுக்காக தொடக்க வீரராக களமிறங்கி 4 சதம்தொடர்ந்து அடித்திருக்கிறார்.

நடுவரிசை

நடுவரிசை

இந்த நிலையில், ருத்துராஜை நம்பர் 3 இடத்தில் களமிறக்குவது நியாயம் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே போன்று மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷனையும் நடுவரிசையில் இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறார். இதனால் நடுவரிசையில் விளையாட காத்திருக்கும் ரஜத் பட்டிதார், ராகுல் திரிபாதி ஆகியோருக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுகிறது.

Story first published: Thursday, October 6, 2022, 17:57 [IST]
Other articles published on Oct 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+