Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்..ஜடேஜாவுக்கு பதில் யார்? தமிழக வீரருக்கு அடித்த லக்.. 4 பேர் கடும் போட்டி

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

Recommended Video

T20 WC 2022: Asia Cup-ல் களமிறங்காத Indian Players-க்கு Chance | Aanee's Appeal

இதனால் ஜடேஜா மூன்று மாதத்திற்கு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் ஜடஜாவுக்கு பதில் யாரை டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் ரோகித் சர்மா இடையே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் இருபதாம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் ஜடஜாவுக்கு பதில் யாரை தேர்வு செய்யலாம் என்று தேர்வு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

ஜடேஜாவுக்கு பதில் சரியான மாற்றுவீராக அக்சர்பட்டேல் தான் இருப்பார் என்று அனைவரும் அறிந்ததே. ஆசிய கோப்பை போட்டியில் கூட ஜடேஜாவுக்கு பதில் அவர்தான் தேர்வு செய்யப்பட்டார். டி20 உலக கோப்பையில் ஜடேஜா இடத்தை அவர்தான் பிடிப்பார் என்று ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. ஜடஜா போல் பேட்டிங்கில் அக்சர் பட்டேல், சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2015 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்சர் பட்டேல் இடம்பெற்றிருந்தார். தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஆஸ்திரேலியாவுக்கு அவர் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வாசிங்டன் சுந்தர்

வாசிங்டன் சுந்தர்

டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெற முடியாவிட்டாலும் ஆஸ்திரேலியா தொடரில் கண்டிப்பாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திறமை வாய்ந்த ஆல்ரவுண்டராக கருதப்படும் வாஷிங்டன் சுந்தர் அண்மைக்காலமாக காயம் ஏற்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜிம்பாப்வே தொடரில் வாஷிங்டன் சுந்தர் பெயர் இருந்தும் அவர் கடைசி கட்டத்தில் இடம்பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் உடல் தகுதி நிரூபிக்கப்பட்டால் அவர் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஷபாஸ் அகமது

ஷபாஸ் அகமது

பெங்காலி சேர்ந்த ஆல் ரவுண்டரான ஷபாஸ் அஹமது, ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். எனினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஷபாஸ் அஹமத் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் தேர்வு குழுவினர் ஷபாஸ் அஹமதுக்கு ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

இடது கைசுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய தொடரில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. சாஹலும், குல்திப் யாதவும் இணைந்து ஒரு காலத்தில் எதிரணி வீரர்களை மிரட்டினர். தற்போது ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கிடைத்து அவர் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் இந்திய அணியில் ரிசர்வ் வீரர்கள் இடத்தில் ஆவது குல்திப் யாதவ் இடம்பிடிப்பார்.

Story first published: Saturday, September 10, 2022, 21:19 [IST]
Other articles published on Sep 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+